பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76



மனத்துக்கு மனம் சாட்சி, மற்றதுக்குத் தெய்வம் சாட்சி எண்: பழமொழி ஒன்று வாழ்ந்து வருகிறது. மாமல்லன்னப் பொறுத்த மட்டில் மனம் சாட்சி சொன்னது, ஆனால், தெய்வம் சாட்சி சொல்லவில்லை. பேசும் மனிதன் கூப்பிட்ட குரலுக்கு பேசாத தெய்வம் எவ்வாறு செவி சாய்த்து ஓடிவர முடியும்.. ?


அம்பு துளைத்துப் பாய்ந்தாற்போல வேதனைப் பட்டான், வலி தாளாமல் இன்னல் அனுபவித்தான். அம்பு! -வில் அம்பா ... சொல் அம்பா ?


இரண்டாவது களத்தில் மாமல்லன் நுழைந்தான்.


மேகலை அளித்த அமைதியையும் ஆறுதலையும் பறித்துக் கொண்ட தன் மனத்தின் பான்மையைநிந்தித். தவாறு, குழப்பத்தில் கனிந்த விரக்தியோடு பூங்காவிலிருத்து நடந்து தேர்முட்டி மு ைன யி ல் திரும்பியபோது திருமாறனைக் கண்டான் முதல் நாள் அவனைப் பார்த்த தேடு சரி, அப்புறம் அவனைச் சந்திக்கவில்லை, கண்டு பேச விரும்பவுமில்லை. உள்ளங்கை நெல்லிக் கனியைத் தட்டிப் பறித்துக்கொண்ட எதிரியென்று திருமாறனைக் கருதினான் மாமல்லன். முகத்தில் கடுமையின் நிழல் படிந்தது. மாமல்லனிடம் அவன் பெயர் குறித்திருந்த அழைப்பிதழைக் கொடுத்தான் பணக்கார இளைஞன். அவன் ஏற்கனவே படித்து முடித்து மடல் தானே ? மூக்கின் நுனியில் சூழ்ந் திருந்த நறுமணத்தின் வாடை அவனைத் திணர வைத்தது ! திருமாறன் ஆரம்பிக்கவிருக்கும் புது மண வாழ்வின் புதிய நறுமண்மா அது ? அதனால்தான் அவன் இத்தகைய பெருமிதத்துடன் காணப்படுகிறானோ ?


தன் திருமணத்துக்கு அவசியம் வர வேண்டு மென்று மீண்டும் மாமல்லனிடம் நினைவூட்டினான் திருமாறன்.