பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ


‘உண்மை நின்றிட வேண்டும் !


ஓம்...ஓம்...ஓம்...ஓம் !”


கெட்டி மேளம் கெட்டி மேளம் !”


நாதசுரம் மணமக்களுக்கு வாழ்த்துப் பாடியது, கொட்டு மேளம் ஆரத்தி எடுத்தது, திருமண கீதம் பாடிய இசைத் தட்டுகள் திருஷ்டி கழித்தன. மஞ்சளில் பிசைந் தெடுக்கப்பட்ட அட்சதைகள் வாழ்க ! வாழ்க 1’ என்று நல்லாசி கூறின. உண்மைத் தமிழினும் அவனுடைய ரத்தத்தோடு ரத்தமாக ஐக்கியப்பட்டிருக்கும் தமிழ்ப் பற்றும் போல மாமல்லனும் மேகலையும் வாழ்வீர்களாக’ என்று நண்பர்கள் சிலர் அச்சடித்த பத்திரங்களின் வழி


யாக தங்களின் நல்லெண்ணங்களைத் தெரிவித்துக் கொண்டார்கள், பரிசுகள் கொடுத்தார்கள் சிலர்,


பாராட்டுரைகள் வழங்கினார்கள் பலர்.


கண் முன் கண்டு கொண்டிருந்த காட்சிகள் ஒவ்வொன்றுமே மாமல்லனுக்குக் கனவு மாதிரியேதான் தோன்றியது. மேகலையின் கழுத்தைத் தொட்டு, எண்ணி மூன்று முடிச்சுக்கள் இட வேண்டுமென்று அன்று மனக் கோட்டைக் கட்டினான், எழுப்பிய தளத்தைப் பலப்படுத்த எண்ணங்கள் தளம் அமைந்தன, கோட்டைக்குள் அமைக்கப்பட்டிருந்த வசந்த மண்டபத்தின் எழில் ராணி யாக ஏற்றம் தந்தாள் மேகலை. அவள் அவனுடைய கனவுப் பதுமை, அவன் ஒருவனுக்கே முன்றானை போட’ பாத்தியதை பூண்ட தங்க நிலா அவள். அவ்வாறுதான் அவன் அன்றைக்குக் கனவு கண்டான் மமதையோடு