பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8s;


மனப் பூரிப்போடு. கண்ட கனவு தேய்ந்து மறைந்து விடுமோ என்று எண்ணும் அளவுக்குச் சந்தர்ப்பங்கள் சூழ் நிலையை உருவாக்கிய தருணத்திலே, அவனிடமிருந்து மேகலை எட்டாத தொலைவுக்கு எட்டி எட்டி விலகி கொண்டிருப்பதாக ஒரு பிரமை எழத் தொடங்கியது.


ஆண்டவனிடமிருந்து நன்மையை எதிர் பார்க்கையில் மனிதனின் மனம் ஐயன் பேரில் பக்தி கொள்வது இயல்பு. ஆனால் எண்ணியதற்கு நேர்மாறாகக் காரியம் நிகழுவதைக் கண்டால், கடவுள்மீது வைக்கப்பட்ட பக்தி தன்னாலே குறைந்து, ஆத்திரம் தலையெடுக்கின்றது. இப்படிப்பட்ட பண்பு மாற்றத்தின் விளைவாகத்தான் இயற்கையின் நியதி கூட தலை கீழ்ப்பாடமாகி விடுகிறதோ? படைத்தவனையே வம்புக்கு இழுக்கவும் துணிகின்றானே மனிதன் இந் நிலைக்கு மாமல்லன் சாட்சியாக அமையவில்லையா ?


காமல்லன் இப்பொழுது புத்தம் புதிய மரமல்லன். மேகலையின் பொன்னிறக் கழுத்தைக் கை விரல்கள் தீண்ட, மேனி அழகு அவ்வளவையும் ஜோடி விழிகள் மோடி செய்து அனுபவிக்க, அவன் மங்கல நான் பூட்டினான் அல்லவா ?- அப்போது அவனது உடலில், உள்ளத்தில், உயிரில், உணர்வில் புதுகை மிகுந்த ஏதோ ஒர் அனுபவம் கிளர்ந்தெழுந்தது. மேகலை இனி மேல் என் நிதி, என்ற எண்ணம் தோன்றிய சமயத்தில் அவன் ஆண்டவனிடம் தான் முதலில் ஓடினான். அப்பனே, என்னை மன்னித்துக் கொள் என மன்றாடிப் பிரார்த் தித்தது மனம், எண்ணியது பலித்து விடும் போது, இறைவன் பால் கனியும் பக்தியினை சுய நலமென்று உரைக்கலாகாதா? மணவறையில். சுடரொளி சிந்தி வாழ்த்திய ஹோமத்தீயை அவனால் மறக்க முடியாது, புதுப் புனலாடி, கணவனும் மனைவியும் தீ வலம் வந்த பின், வான வெளியின் கீழே நின்று அருந்ததியை அண்ணாந்து பார்த்த பரம்பரைப் பண்பாட்டைத் தான்