பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85



வும் ஒரு திட்டம் உருவெடுத்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் மாமல்லன் தாயிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்தான். மேகலையின் திருமணம் முடியும்வரை அவள் அரியலூரில் இருக்க வேண்டுமென்பதுதான் அவனுடைய விண்ணப்பத்தின் பொருள். கடிைசியாக ‘ம்’ கொட்டினாள் அன்னை. தன் தமையன் வீட்டுப் பச்சைத்தண்ணிர் கூட பல்லில் படாதென சூளுரைக்கவும் அவள் மறக்கவில்லை.


ஆனால், பாசமும் சபதமும் ராசி’ ஆகிவிட்டன. மேகலை மாமல்லன் இணையின் நல்லதிர்ஷ்டம் சோம சுந்தரத்திற்குரிய சைகோன் சொத்துக்குத் தீவினை விளைந்தது. கடன் ரகசியத்துக்கும் காற்றுக்கும் ரக சம்பந்தம் இருக்க வேண்டும். காற்றை எப்படி யாரும் அணை கட்டித் தேக்கிவிட இயலாதோ, அதே மாதிரி கடன் ரகசியத்தையும் ஒருவராலும் ஒளித்து வைக்க முடியாது. எப்படியோ செய்தி பட முதலாளிக்கு எட்டியது அப்பாவுக்குப் பணத்தில்தான் நாட்டம், இளவரசுப் பட்டம் திருமாறனுக்கோ மேகலையின் எழிற்கூட்டில் இஷ்டம், அப்பாவுக்குத்தான் இறுதி வெற்றி கிடைத்தது, தேதி வைத்த முகூர்த்தத்துக்கு ஒப்ப மறுத்து விட்டார் தன வந்தர்.


சோமசுந்தரத்துக்கு விஷயம் எட்டியது. தலையில் விழுந்த அடி அடிவயிற்றிலே வெடித்தது. ஐயோ, இப்ப நான் என்ன செய்யப் போறேன் ? ... ஊருக்காரங்க என்னைத் துாற்றப் போறாங்களே... பெரிய இடத்துச் சம்பந்தம் மேகலைக்குக் கிடைக்க வேணுமேன்னுதானே முதலிலே பொருந்திப் போன மேகலை - மாமல்லன் ஜாதகத்தைப் பொருந்தலைன்னு கூட நான் பொய் சொல்ல வேண்டி வந்துச்சு கடைசியிலே என்வினை என்னையே சுட்டுப்புடுச்சே ... என் தலைவிதியே என்னைக் குழி தோண்டிப் புதைச்சுடப் பார்க்குதே ? ஈஸ்வரா, என் மானத்தைக் காப்பாற்று” என்று துதி பாடினார்.