பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 அன்பு அலறுகிறது கடவுளே! என் கணவருக்கும் எந்தவிதமான ஆபத்தும் கேராமல் காப்பாற்று எங்கிருந்தாலும் என் கணவர் தீர்க்காயுசோடு இருக்கட்டும். எனக்குப் பின் அவர் மரிக்கட்டும்; அந்த ஒரு பாக்யமாவது எனக்குக் கிடைக்கட்டும்!" என்று என் கணவரின் படத்தையே பார்த்துக் கண்மூடிப் பிரார்த்தித்தேன். ஆம்; கணவர்தானே எனக்குக் கடவுள் மறுபடி யும் நிலைக்கண்ணுடியில் என் உருவம் தெரிந்தது. தாலி...? ஒருவே8ள லங்கேஸ்வரன் அதை எடுத்துக் கொண்டு போய்விட்டாரா, என்ன? பைடார்’ என்று கதவைத் திறந்து கொண்டு தட தடவென க் கீழே இறங்கினேன். கூடத்தில் தரையில் அந்த மாங்கல்யச் சரடு கிடந்தது! அதைக் கண்டதும் என் கணவரே மீண்டும் வந்து என் எதிரே கின்று என்னை ஏற்றுக்கொள்வது போலவும் இனிமேல் உன்னை எவனுக்கும் கான் தாரை வார்த்துக் கொடுக்க மாட்டேன் என்று உறுதி யளிப்பது போலவும் தோன்றிற்று. ஆனந்தத்தால் விம்மும் இதயத்தோடு அதை எடுக்க ஓடினேன் ஐயோ! என் மேல் காட்ட வேண்டிய கோபத்தை யெல்லாம் பூரீமான் லங்கேஸ்வரன் அதன்மேல் காட்டி யிருக்கிருரே? பாவம் படிந்த தன் பாதத்தால் புனித மிக்க அதை மிதித்துத் தேய்த்திருக்கிருரே?-என்ன செய்வேன் அந்தப் புண்ணியவாளரின் பாதத்தில் மாங்கல்யம் மிதிப்பட்டு நசுங்கித் தேய்க் துவிடக் கூடாதே' என்று மறுபடியும் அணிக்து கொள்வதற் காக அதை எடுக்கக் குனிந்தேன்.