பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அன்பு அலறுகிறது என்ற உண்மையை ஒரு தடவை. ஒரே ஒரு தடவை சொல். அதைக் கேட்டு என் கண்கள் மலரட்டும்; காதுகள் குளிரட்டும்-சொல் லலிதா சொல்!” என்று கண் கலங்க பல்லெல்லாம் தெரியக் கெஞ்சு கெஞ் சென்று கெஞ்சினர் அவர். அவமானம் தாங்காமல் முகம் சிவந்துதான் அவரை கோக்கினேன்.

சொல் லலிதா, சொல்! - காதல் கொண்ட நெஞ்சத்தை உடைத்தெறிந்த பாவம் உன்னைச் சேரப் போகிறது! இதோ இன்றே இப்பொழுதே ஒடும் ரயிலி லிருந்து கீழே குதித்து கான் உயிர்விடப் போகிறேன். என்னை நீ தடுக்காவிட்டால கான் சாவது நிச்சயம் லலிதா, சாவது கிச்சயம்!” என்று அவர் எழுந்தார்.

கான் தடுக்கவில்லை! அவரோ கதவைத் திறந்துகொண்டு, இதோ, இன்றே, இப்பொழுதே...” என்று என்னைப் பார்த்துப் பார்த்துப் பயமுறுத்திக்கொண்டிருந்தார். அந்தப் பெட்டியின் மூலையிலிருர்து ஓர் உருவம் திடீரென்று எழுந்து வந்து அவருடைய கழுத்தில் கை வைத்தது. கான் திகைத்தேன்; பயந்து கூவ முயன்றேன்.ட தொண்டை அடைத்தது. வந்தது யார்? ரீமான் லங்கேஸ்வரனைத் தள்ள வந்தவ ைதடுத்தாட்கொள்ள வந்தவனு? எனக்கு ஒன்றும் புரியவில்லை.