பக்கம்:அன்பு மாலை.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அன்பு மாலை

சொல்வித்தை யன்றுண்மை சொல்கின்றேன் கேண்மின்;
தூயதிரு அருணையிலே சென்றங்கே காணும்
பல்வித்தை யுற்றஇந்த ராமசுரத் குமாரைப்
பதம்பணியும்; நெஞ்சகத்தில் சாந்தமடை வீரே.

111


வித்தம்- பொருள்.


இங்கேதான், இருப்பேனோ, அங்கேபோ வேனோ?
யாவர்என்னை என்னசொல்வார் எண்றெண்ணி எண்ணிச்
சங்கேதம் பலநாடிச் சந்தேகம் கொண்டு
தவிமனத்தில் கவலைகள் மண்டிமிக வாடும்
பங்கேறும் உளமுடையீர்,இங்கேநீர் வம்மின்,
பலகவலை உம்மிடத்தே பாயாமல் செய்வான்;
சங்கேந்தும் திருமால்போல் ராமசுரத் குமாராம்
தவமுனிவன்;ஆதலினால் தாளிணையே சார்மின்.

112

சங்கேதம் - குறிப்பு.

கனைக்கின்ற சிங்கம்போல் தோற்றமது கொள்வான்,
கவின் குழந்தை எனநாளும் பெருஞ்சிரிப்பைச் சிரிப்பான்;
மனக்குன்றம் அதிலேறி நிற்கின்ற செல்வன்,
வாழ்வெல்லாம் நல்வாழ்வாய் வைத் திருக்கும் வள்ளல்
எனக்கொன்றென் றில்லாத பெருஞானத் தவத்தோன்
இழிவறியாப் புகழறிவான்.யாரேவந் தாலும்
தனக்குன்றம் போலருளை வழங்கிடுவான். அவன்தன்
தாளடைந்தே எந்நாளும் பயன்பெறுவீர் நீரே.

113


கவலையெல்லாம் போவதற்கு வழிசொலுவேன் கண்டீர்
கனத்தபெருங் கவலையெல்லாம் போக்கியின்பம் பெறலாம்
அவலமுறும் சிறுவாழ்வில் உறவால்நட் பாலே
அடைகின்ற துன்பினின்றும் விடுதிபெறல் உண்டாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/52&oldid=1304278" இலிருந்து மீள்விக்கப்பட்டது