(Lecturer in Physics, Queen Mary's College) ஒரு விரிவுரையில் மகாலிங்கையருரையைப் பற்றிப் பேசியமை நினைவிற்கு வா, அம்மையாரவர்களைக் கேட்டபோது; தம் உரை நூலை அன்புடன் உதவினர். அவ்வுரையை இந்நூலில் காண்போர், அவ்வம்மையார்க்கே நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளார்கள்.
எனது நண்பர் திரு.பண்டிதமணி-கதிரேசம் செட்டியா ரவர்கள் கூறுவதைப் பன்முறையும் கேட்டுப் பாடல்களோடு ஒருங்கியைந்து “சமாதிகூடிக் கண்ட சுவையுலக உண்மை களை, இலக்கியச்சுவை யொன்றே நாடி, யான் எழுதியமை கண்டு, இதனில், சித்தாந்த சாத்திரம்" என வழங்கும் மெய்யுலக உண்மைகள் இல்லையே எனக் கையை முறிப் பார்க்கு ஒன்று கூறுவேன். சேக்கிழார் நூலை உங்களுடைய மெய்யுலகில் வாழ்வார் மட்டுமேயன்றி, எங்கு வாழ்வாரும் கண்டு கேட்டு இன்புறப்பாட்டுலகில் வழிகாட்ட முற்பட் கெட்ட எண்ணத்தாலன்றே? வழிகாட்டுவதுபோலப் படுகுழியில் தள்ளுகின்றேன், என்பீரேல் யான் அதற்கு மிக வும் வருந்துகின்றேன். எனினும், யான் வேறு வழியில் நடப் பதற்கில்லையே. அல்லாக்கால் யான்' பொய்யனாவேன்.
டது,
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்
தமிழகம் சிந்தாதிரிப்பேட்டை,
Gr 26. 24-5-34.
இங்ஙனம்,
தெ. மீனாக்ஷிசுந்தரன்.