அன்புமுடி
அ
அல்லது
எ றிபத்தர்
க. அன்போ கொலையோ?
வரலாற்றின் வரலாறு:-எ றிபத்தர் என்பவர் ஒரு சிவனடி யார். இவரது இயற்பெயரை யாம் அறியோம். இவர் அன்பர்க்கு டையூறு நேர்ந்தவழி அவ்விடையூறு செய் தாரை மழுவால் எறிந்து இடுக்கண் களைந்து அன்பு பாராட்டி ஒழுகினார்; ஆதலின் எல்லோராலும் எறிபத்தர் எனப் புகழப்பட்டார். புகழுடம்பிற்குரிய அச்சிறப்புப் பெயரே இவருடைய திருப்பெயராக நிலவி வருகின்றது. இவருடைய வரலாற்றையே புனைந்துரை வகையால் சேக் கிழார் பாடுகின்றார்.
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற் கடியேன்
என ஆளுடைய நம்பிகள் பாடிய அடியே, சேக்கிழார்க்கு முதல் நூலாகும். மழுவின் நுனியை இலைவடிவாம் வேல் போலக் கூராக வைத்திருந்தமை பற்றி நம்பிகள் இவரை வ்வாறு புகழ்ந்தனர் போலும்.நம்பியாண்டார் நம்பி, "ஊர்மதில் மூன்றட்ட உத்தமர்க் கென்றோர் உயர்தவத்தோர் தார்மலர் கொய்ய வருவான் தண்டின் மலர்பறித்த