இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அன்போ கொலையோ?
7
முட்டவெங் கடங்கள் பாய்ந்து
முகிலென முழங்கிப் பொங்கும் பட்டவர்த் தனத்தைக் கொண்டு
பாகரும் அணைய வந்தார்."
51
எனச் சேக்கிழார் பெருமான் இப் புனைந்துரையிலும் இத் திருவுள்ளக் குறிப்பை விளக்கி வைப்பது காண்க.
அன்பின் திருவிளையாடல்:-ஆதலின், கடவுளின் கண் கட்டு விளையாட்டைக் கண்டு கருத்தழிதல் வேண்டா. இ கண் மயக்கில் எழுந்து விளங்கும் அன்பு நிலை யாது, என்ப தனையே நாம் ஆராய்தல் வேண்டும். அழியாப் பெருவாழ் வாம் அன்பு வாழ்க்கையில் இறப்பேது? பிறப்பேது? திரு வருள் கூட்டுவிக்குந் திருவிளையாடலினிடையே திகழ்ந்து விளங்கும் இன்ப அன்பின் எழிலார் வடிவத்தையே, சேக்கி ழார் பெருமான் ஓவியமாக எழுதிக்காட்டி, அதனோடியைந்து இன்னிசையாகப் பாடுகின்றார். ஆதலின், அவர் காட்டும் மன நிலையையே நாம் ஆராய்தல் வேண்டும்.