பக்கம்:அன்பு முடி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பூத்தொண்டு

21

சிவகாமியாண்டார் என்போர் அறநிலை பிறழாத அற வோர்; நிறைமொழி மாந்தராய் (முனிவர்) நின்ற அந்தணர் பெருமானார். இவர், மலையெனத்துக்கலாகாத பேரன்புடை யார் பெருமானிடத்தே இவர் தம் பேரன்பும் பெருகிவளர்கின் றது. கடவுண்மாட் டெழுந்த காதலே இவருடைய உள்ளம் நிறையநிற்கின்றது. வேறொன்றை எண்ணவும்,பேசவும், செய் யவும், அவ்வுள்ளத்தே இடமில்லாதபடி, இக்காதல் வெள் ளம், நிறைந்து பொங்குகின்றது. அவ்வன்பு வாழ்க்கையையே, பேரொழுக்கமாகப் போற்றி, அன்புவடிவாக இவர் வாழ்ந்து வருகின்றார்; அவ்வன்பிற்கும் அவ்வின்பத்திற்கும் போக்கு வீடாகப் பூப்பறித்து அலங்கல் சாத்தியும், ஆண்டவனாரது அழகு மலர் ஒப்பனையைக் கண்டு களித்தும், அக் களிப்புக் குப் போக்கு வீடாகப் பூப்பறித்து அலங்கல் சாத்தியும், மாறி மாறித் தன்னுள் தானே உருண்டு வரும் அன்பு வட் டத்திற்குள் அகப்பட்டு, இன்ப ஒளியாய் விளங்குகின்றார்.

பூநோன்பு:- சிவகாமியாண்டார் பூப்பறித்து அலங்கல் சாத்துதலை ஒரு நோன்பாகக் கொண்டுவாழ்ந்து வருகின்றனர்; பொழுது புலர்வதன் முன்னம் துயிலொழிந்து, எழுந்து போந்து,தூயநீரில் மூழ்கி உள்ளும்போல் புறமும் தூயரா கின்றார்; தாம் பறிக்கும் மலர்களில், வாயிலிருந்தூறும் எச்சிற் படாதபடி, வாயைக் கட்டிக்கொள்கின்றார்; நறுமணங் கமழுமாறு நன்கு மலர்ந்த நந்தவனத்திடையே இறை வனது இன்ப அன்பையே, எண்ணிக்கொண்டு, புகு கின்றார். இப்பெரியார், இவ்வறத்துறையில் எவ்வளவு கைதேர்ந்தவர் என்பதனை, இவர் மலர் பறிப்பதின்நின்றுமே றியுங்கள். மலர்களிற் சிறந்தனவாயும், இறைவன் மீது சாத்தும் வேளையில் எவர் மனமும் மணத்தோடு விரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/31&oldid=1559670" இலிருந்து மீள்விக்கப்பட்டது