36
அன்பு முடி
யாகவும், அனைத்தையும் கடந்த திருமுடி நிலையை, உலகிடை யே கடவுட்பிணையலைக் கண்டறிந்தோருக்கு அப்பிணையலி லிருந்தே தெளிந்தெழுந்து தோன்றும் அருளும் அறிவும் இயைந்ததோர் முடிநிலையாகவும், அமைத்துக்கொண்டு அமர் ந்து விளங்கும் அவ்வுயர் பொருள், அடியாரது அன்பொன் றற்கே உள்ளடங்கி நின்று, அவர்களது அன்பையே அழ கொப்பனையாகக் கொண்டு, ஒளிர்கின்றது. இவ்வுண்மை- யினை இம்முறையீடு நன்கு விளக்குவது காண்க.
.
அன்பின் எதிர் நிலை:- வேறுண்ணினைவார் அழிவதனை யும், மறலிமாள்வதனையும், களிற்றுரிபோர்த்தலையும், எண்ணி எண்ணி, இறைவனது இயற்கை நெறிக்கு எதிர் செல்வார் படும்பாட்டைச் சிவகாமியாண்டார் நினைப்பூட்டுகின்றார். இன்ப நெறிக்கெதிரே துன்பநெறியே தோன்றும். அழியா மைக்கெதிரே அழிவே காண்போம்.
தோன்றாத் துணை:- இவ்வின்ப அன்பு நெறியில் சிவ காமியாண்டார் நின்ற நிலை யாது எல்லாம் இறைவனே என்ற உண்மையை உணர்ந்து, எல்லாம் அவன் செயல் என இயற்கையோடியைந்து நிற்கின்றார், இவ்வன்பர். இவரு டைய அறிவுக்கறிவாய் இருந்து அனைத்தையும் இயக்குகின் றான் இறைவன், என உறுதி கூறுகின்றார் சிவகாமியாண் டார் இறைவன், இவருக்கு, மூவா மருந்தென இனிக்கின்றா னாம். உண்ட நிலையில் உறக்கமும் இது இன்ப வுணவுண்ட போதோ தெளிவே உண்டெனத் தாம் துய்த் துணர்ந்ததைச் சுட்டிக் காட்டுகின்றார், சிவகாமியாண்டார்; முதுமையிலும், குளிர் எனப்பாராது, தண்ணீரில் மூழ்கி இரவில், தடியூன்றி நடந்து, தொண்டு புரிதற்கு, எங்கிருந்து வன்மை பெற்றார், என்பதனையும் விளக்குகின்றார்.அன்பு
உண்டு.