எரிமலை
39
"வந்தவர் அழைத்த தொண்டர் தமைக்கண்டு வணங்கி நும்மை இந்தவல் இடும்பை செய்த யானை எங்(கு) உற்ற(து)," என்ன எந்தையார் சாத்தும் பூவை என்கையிற் பறித்து மண்மேல் சிந்திமுன் பிழைத்துப் போகா நின்ற(து) இத்தெருவே" என்றார்.
21.
'இத்தெருவே':-முறையீட்டைக் கேட்ட எறிபத்தர், முறையிடும் சிவகாமி யாண்டாரை நேரிற் காண்கிறார். அன்பு குழைந்து அவரை வணங்குகிறார். தீ வடிவமும் இவ்வாறு அடியார் எதிரே நீர் வடிவமாகிறது. "இவ்வாறு பெருந்துன்பம் செய்த யானை எங்குப் போய்விட்டது" என்று எறிபத்தர் வினவுகிறார். சிவகாமியாண்டாரும், தமது வருத்தத்தை வெளியிடுவாராய் "எந்தையார்க்குச் சாத்தும் பூவை என் கையினின்றும் பறித்து மண்மேற் சிந்திப்
பிழைத்துப் போகிறது, இத்தெருவே எனச் சுட்டிக் காட்டு கின்றார். "இத்தெருவே" என்று பாடும் சேக்கிழாரது கூத்து நூனயம் பாராட்டற்பாலது. சிவகாமி யாண்டார், இங்கும் இறைவனுக்குச் செய்யும் ஒப்பனையையே எண்ணி, அதனை இழந்ததனையே சுட்டுதல் காண்க.
“பிழைப்பதேது” :-
"இங்(கு) அது பிழைப்பது எங்கே இனி" என எரிவாய் சிந்தும் அங்கையின் மழுவுந் தாமும் அனலும்வெங் காலும் என்ன பொங்கிய விசையிற் சென்று பொருகரி தொடர்ந்து பற்றும் செங்கண்வா ளரியிற் கூடிக் கிடைத்தனர் சீற்றம் மிக்கார்.'
22.
"கண்டவர் 'இதுமுன்(பு) அண்ணல் உரித்தஅக் களிறே போலும் அண்டரும் மண்ணுளோரும் தடுக்கினும் அடர்த்துச் சிந்தத் துண்டித்துக் கொல்வேன்' என்று சுடர்மழு வலத்தில் வீசிக் கொண்டெழுந் தார்த்துச் சென்று காலினாற் குலுங்கப் பாய்ந்தார்."
று
23.