பக்கம்:அன்பு முடி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

அன்பு முடி

'பிழைத்துப் போகிறது' என்று மனம் வருந்திக் கின்றமை கேட்ட எறிபத்தர் "இனி இவ்வுலகில் பிழைப்பதேது' என உறுதிகூறி மேற்செல்கிறார்.

அறிவு கலங்கினும் அன்பு கலங்கார்:- தீயாய் நின்றவ ரது அங்கையிலே எரியைக் கக்கும் மழுவொன்று விளங்கு கிறது. தீயோடு கடுங்காற்றும் ஒருங்கியைந்தாற்போல முந் திச் செல்கின்றார் எறிபத்தர்; விரைவு என்ற ஒன்றே பொங்கு வதுபோல, விரைந்து சென்று, அக் களிற்றைக் கண்டு, பின் தொடர்கின்றார்; தன்னொடு பொருது தன்னைத் தாக்கும் யானையைக் கண்டு, சினத்தால் கண்சிவக்கும் மடங்கல், அவ் வியானைமேல் பாய்ந்து, பின்தொடர்ந்தோடுதல் போலச் சிற் றத்தோடும் பெருமித நடையோடும் சென்று அவ்வானையைக் கிட்டுகின்றார்; காண்கின்றார் யானையை. இவர் அறிவையும் வியப்புறச் செய்கின்றது அவ்வானை."முன்னர் ஆண்ட வன் உரித்த அவ்வானையோ ஈது என அவர் எண்ணமிடு கிறார். அவருக்கும் அத்தகைய தோற்றமுண்டாயதென ஒரு நுட்பம் காட்டுகின்றார் சேக்கிழார். அறிவு ணுக் கிட்டதேனும் அன்பு துணுக்கிடவில்லை. "நது அந்தக் களி றேயாயினும், இதனை அடர்த்துச் சிறித் துணித்துக் கொல் வேன். விண்ணவர் வந்து தடுக்கினும் விடேன். மண்ணவர் வந்து தடுக்கினும் விடேன். இருவரும் ஒருங்கியைந்து வந் தடுக்கிலும் வீடேன்." எனத் துணிவு கொள்கின்றார் எறிபத் தர். "அரசன் யானையாயினும் அதுபற்றிப் பின் வாங்கேன்" என்று சொல்லியபடி என்க.

காலினிற் குலுங்கப் பாய்ந்தார்:- துணிந்ததும் தமது டர்வீசும் மழுவினை வலமிடமாகச் சுற்றிக்கொண்டே தித்தெழுந்து ஆர்க்கின்றார் எறிபத்தர்; தம்முயிரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/50&oldid=1559689" இலிருந்து மீள்விக்கப்பட்டது