பக்கம்:அன்பு முடி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எரிமலை

41

பொருட்படுத்தாது சிவகாமியாண்டார்க்கு உதவுவதையே பொருள் என எண்ணிச் செல்கின்றார்; சென்று யானை குலுங் கக் காலிற் பாய்கின்றார். இவரது தறுகண்மையை என் என் பது!

4

தாயின் தலை யன்பு:-

"பாய்தலும் விசைகொண் டுய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக் காய்தழ லுமிழ்கண் வேழந் திரிந்துமேற் கதுவ, "அச்சம் தாய்தலை யன்பின் முன்பு நிற்குமே!" - தகைந்து பாய்ந்து தோய்தனித்தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்.' 24.

பாய்ந்ததும் மாவெட்டிகள் இப்போரினைத் தடுப்

கனகன

பதற்காக எண்ணி, அப்புறத் அப்புறத்தே அவ்வானையைச் செலுத்திக் கொண்டுபோக முயல்கின்றனர். ஆனால் அவ் வானையோ, அவர்வழிச் செல்லாது, அவர்களையும் தன் வழியே உடன்கொண்டு சீறுகிறது. யானையின் கண்கள், என்றெறியும் நெருப்பை யுமிழ்கின்றன. எறி பத்தர், பின்புறமாகப் பாய்ந்ததும், அவ்வானை அவருக்கு நேரே திரும்பி, அவரைப் பிடிக்க முந்துகிறது. எறிபத்தர் இதற்கு அஞ்சுகின்றாரோ? தாயினது தலையளிக்கு எதிரே அச்சமும் முன்பு நிற்குமோ? கன்றினைக் கௌவிச் செல் லும் கடும்புலியின் மேலும் சென்று கற்றா பாயுமன்றோ? வீடு பற்றி எரிகிறது. குழவி உள்ளே தூங்குகிறது. குழந் தையைக் கொண்டுவர வீட்டிற்குள் பாய்கின்றாள் தாய் அவள் எரிக்கு அஞ்சி நிற்பதில்லை. தம்மை மறந்த அன்பு நிலையில், தமக்கு வரும் கேட்டையும் அன்றோ மறப்பர் அன் பர். தோன்றாது நின்ற வொன்றற்கு அஞ்சுவதேது? அன்பிற் சிறந்த தலையன்போடு உள்ளமுருகும் தாயின் நிலை, இதனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/51&oldid=1559690" இலிருந்து மீள்விக்கப்பட்டது