பக்கம்:அன்பு முடி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அன்பு முடி

னும் அழகிது. தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர், தமக் கென அஞ்சுவதேது?

தொண்டர் துணித்தார்:-யானை, எட்டிப் பிடிக்க வந்த போது, சிறிது அப்புறந் தள்ளி நின்று, உடனே யானைமேற் பாய்கிறார் எறிபத்தர்; நிலம் வரை தொங்கிப் பனைபோல் பரு த்த பெருந் தும்பிக்கையை, மழுவினால் எறிகின்றார்.அத்தும் பிக்கையும் கீழே வீழ்கிறது. "பகையோ மறமோ கருதாது தொண்டே கருதி இங்ஙனம் செய்கிறார், என்பது இந்நிலை யில் தோன்றுவதனைக் காண்மின் எனக் காட்டுகின்றார் சேக்கிழார்; "தொண்டர் துணித்தார்' எனப் புகழ்கின்றார்.

ஐவரைக் கொன்று நின்றார்:-

37

"கையினைத் துணித்த போது கடலெனக் கதறி வீழ்ந்து மைவரை யனைய வேழம் புரண்டிட மருங்கு வந்த வெய்யகோற் பாகர் மூவர் மிசைகொண்டார் இருவர் ஆக ஐவரைக் கொன்று நின்றார் அருவரை யனைய தோளார்."

25.

கட

ஒரே வெட்டில் ஒழிகின்றது அவ்வானை; தும்பிக்கை வெட்டுண்டபோது அந்நோய் பொறுக்கமாட்டாது லெனக் கதறி வீழ்ந்து கருமலைபோலப் புரள்கிறது. எதிரே சென்ற குத்துக் கோலாளர் மூவரும் மேலேறி வந்தமாவெட்டிகள் இருவரும் ஆக ஐவரையும், மலையனைய யானையினெதிரே, மலையனைய தோள்வலியுடைய எறிபத்தர் கொல்கின்றார். இப்போரினை இவ்வளவு சுருக்கமாக முடிக் கின்றார் சேக்கிழார். இவ்வளவும் இமைப்போதில் முடிகின் றது. இதைக்கண்ட பிறர், ஓடிவிடுகின்றனர். எறிபத்தரது சீற் றமோ தணிந்தபாடில்லை. அவர், ஒருகையானை யருகே இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/52&oldid=1559691" இலிருந்து மீள்விக்கப்பட்டது