எரிமலை
43
கையானைபோலச் சுடர்விடும் மழுவேந்தி நிற்கின்றார். இவ் வாறு, களிற்றினை வெளியேவிட்ட அரசன் வரையிலும், இவ ரது சீற்றம் செல்கிறது. இதனை வெளிப்படையாகச் சொல்ல மாட்டாத சேக்கிழார், சூறிப்பாற் பெற வைக்கின்றார். பின் னர், எறிபத்தர் புகழ்ச்சோழன் எதிரே நின்று "அன்பனார் தமக்குத் தீங்கு நினைத்தனன் என்று தமக்குள் வருந்துவ தாகச் சேக்கிழார் கூறுகின்றார். ஆதலின் எறிபத்தரது சீற் றம், சோழனளவும் செல்கின்றதாதலின், அவர், அவன் வரு கையையும் எதிர்பார்த்து நிற்கின்றார்.
33
எ
எறிபத்தரின் முன்னிலை:-அஞ்சாது உதவும் எறிபத்த ரது அன்பு நிலையை இவ்வாறு புனைந்துரைக்கின்றார் சேக்கி ழார் ; இவர் எதிர்த்துத் தாக்கிய யானையின் பெருமையை யும் உயர்த்திக் கூறுகின்றார். அரசன் காவற்குட்பட்ட அவ் வானை, கருமலையொன்று சூறாவளியாய்ச் சுழன்று வருவது போல வருகிறது; கடலெனக் கதறி விழுகிறது. சில மற வர்களுக்குச் சினநிலையில், மலையும் துரும்பாகத் தோன்றும். அவர்களும், மலையென் றறியாது துரும்பென்றெண்ணி மன உறுதியால் வெற்றி பெறுவர். சினத்தால் அறிவு கலங்கிய நிலையன்றோ ஈது. எறிபத்தரோ, அவ்வாறு அறியாது தாக்கு கின்றவர் அல்லர். இறைவனை எதிர்த்த யானைபோலவே இவருக்கு இவ்வானை தோன்றுகிறது. அதன் பின்னும், அஞ்சாது தாக்குகின்றமையே, இவருடைய தறுகணாண்மை யின் சிறப்பு. கடலென்றும், கருமலை யென்றும், கடுங்காற்று என்றும், கடவுள் உரித்த யானை என்றும், யானையைப் புனைந் துரைக்கின்றதுபோல், றதுபோல், எறிபத்தரது நிலையையும், ஒப்புமைப் பொருள்களைச் சுட்டிக்காட்டிப் புனைந்துரைக்கின்றார், சேக் கிழார்."மூளு நெருப்புயிர்த்தழன்று பொங்கி, எரிவாய்