பக்கம்:அன்பு முடி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

அன்பு முடி

கிந்தும் மழுவும் தாமும் அனலும் வெங்காலும் என்னப் பொங்கிய விசையிற் சென்று, பொருகரி தொடரும் செங் கண் வாளரியிற் கிட்டி, சுடர் மழுவலத்தில் வீசிக்கொண்டே எழுந்து, ஆர்த்துக் காலினாற் குலுங்கப் பாய்ந்தபோது, வேழந் திரிந்து மேற்கதுவத் தகைந்து,பாய்ந்து, மழுவினால் துணிக்கின்றார் என்பதாக, விரைந்து பொங்கும் காற்றி னாலே மூண்டெரியும் நெருப்பு வடிவமாக நிலவும் ஒரு மடங்கல் மகனாக எறிபத்தரைப் புகழ்கின்றார் சேக்கிழார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/54&oldid=1559693" இலிருந்து மீள்விக்கப்பட்டது