எ. மூன்றாங் காட்சி
-
கடற் கொத்தளிப்பு
மணிக்கடைக் காப்போர்:-
வெட்டுண்டு பட்டு வீழ்ந்தார் ஒழியவே (று) உள்ளார். ஓடி மட்டவிழ் தொங்கல் மன்னன் வாயில்கா வலரை நோக்கிப் பட்டவர்த் தனமும் பட்டுப் பாகரும் பட்டார் என்று முட்டநீர் கடிது புக்கு முதல்வனுக்(கு) உரையும்' என்றார்." 26. "மற்றவர் மொழிந்த மாற்றம் மணிக்கடை காப்போர் கேளாக் கொற்றவன் தன்பால் எய்திக் குரைகழல் பணிந்து போற்றிப் பற்றலர் இலாதாய்! நின்பொற் பட்டமால் யானை வீழச் செற்றனர் சிலராம் என்று செப்பினார் பாகர்' என்றார்.
27.
மன்னனது
மேலே மூன்றாங் காட்சியில் புகழ்ச்சோழனாரெனும் கடற் கொந்தளிப்பின் ஓவியத்தைக் காண்கிறோம். மாவெட்டி களில் இறந்த ஐவர்போக, மிகுதி நின்றவர்கள் ஓடோடியும் போய், மகிழ்ச்சி வடிவாம் மாலை யணிந் வாயிலை அடைகின்றனர். ஆராய்ச்சிமணி கட்டி ஆளும் அரசன் அன்றோ அவன். அவனது வாயில் காப் போர்களை நோக்கி, "செங்கோல் யானையும் பட்டது; மாவெட்டிகளும் பட்டனர். இறைவனெதிரே சென்று இதனைச் சொல்லுங்கள்" என்று கூறுகின்றனர் ஓடிவந்தோர். அவ்வாயில் காப்பாளரும், விரைந்து சென்று, அரசனை
பற்றலர் இலாதாய்! நின் யானை வீழச் செற்றவர் சிலராம், எனச் செப் பினர் மாவெட்டிகள் என்றெடுத்து உரைக்கின்றனர். அரசனுடன் பேசப் புகுவார் 'வாழிய வேந்தே' என்று கூறித் தொடங்குவதைச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் நாம் காண்பதுபோல இங்கும் காவலாளர்கள் அரசனை வாழ்த்தியே பேசத் தொடங்குகின்றார்கள். சேக்கிழார், தமது
அடைந்து, அவனடி வணங்கி, " வாழிய வேந்தே! ஆரசனை