பக்கம்:அன்பு முடி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அன்பு முடி

காலத்தும், அது வழக்கா யிருந்தமையைச் சுட்டுகின்றார். து நிற்க.

உரை மாறுபாடு:- முன் வந்து கூறிய மாவெட்டிகள் "பட்டது; பட்டனர்' எனச் செயப்படு பொருள் குன்றிய வினையாகவும் செய்வினையாகவும் கூற, அதனை விரைவிற் கேட்டுவந்த வாயில் காப்பாளரோ, "கொல்லப்பட்டது; கொல்லப்பட்டனர்" என்று செயப்பாட்டு வினையாக உட் கொண்டு, 'கொன்றனர்' எனச் செயப்படு பொருள் குன்றா வினையாகக் கூறி, அதற்கொரு செய்வானை வேண்டி, 'சிலர்' என எழுவாயைத் தந்துரைக்கின்றனர். இவ்வுரை மாறுபாடு, விரைவுப் பொருளைக் குறிப்பது காண்க.

மட்டவிழ் தொங்கல் மன்னன் :- வளவனோ தனது ே தோள்வலியால், பகைவரின்றி நாட்டை யாள்கின்றான்; இன்பக்குறியாய் அத்தோளில் அழகிய மலர்மாலை அணிந்து விளங்குகிறான். கடவுளொப்பனைக்கமைந்த மலர்கள் சிந்திக் கிடக்கும் இந்நிலையில், அரசனது அழகிய மலர் மாலையைப் புனைந்துரைக்கும் சேக்கிழாரது உள்ளக் கருத்தினை உய்த் துணர்தல் வேண்டும். இவனும், இன்ப அன்பு வாழ்க்கை யில் ஈடுபட்டவனாதலின், அத்தொண்டர்க் கேற்பட்ட இடை யூற்றின் இயல்பினை அறிவான் அன்றோ?

அலங்கற் சுரும்பினம் கிளர்தல்:-

"வளவனும் கேட்ட போதின் மாறின்றி மண்காக் கின்ற கிளர்மணித் தோள்அ லங்கற் சுரும்பினங் கிளர்ந்து பொங்க அளவில்சீற் றத்தி னாலே 'யார்செய்தார்' என்றுங் கேளான் இளவரி யேறு போல எழின்மணி வாயில் நீங்க."

28.

இதனைக் கேட்டதும்,அரசன் நிலை, எவ்வாறு ஆகிறது? தோளிலணிந்த, இன்ப அன்பு மாலையிலேயே, ஒரு நடுக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/56&oldid=1559695" இலிருந்து மீள்விக்கப்பட்டது