பக்கம்:அன்பு முடி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கடற் கொத்தளிப்பு

47

உண்டாகின்றது. பகைக்கெனத் தினவெடுக்கும் தோள்க என்றோ கிளர்ந்து தோற்றுகின்றன. என் செய்கின்றான் அரசன் ?

அளவிலாச் சீற்றமேயாய்த் திகழ்கின்றான். சீற்ற மிக்க நிலையில், பேச்சேது? "யார் செய்தார்?” என்றும் கேளான். செங்குருதித் துவர் மிக்க சேயிளங் காளை என நின்றான் மடங்கல் ஏறுபோலப் பாய்கின்றான். றிபத்தரும் முன்னிலையில் மடங்கலுக்கே ஒப்பாய் நின் றார். புகழ்ச்சோழன் இந்த முன்னிலையில் மடங்கலுக்கே ஒப்பாக விளங்குகின்றான். சேக்கிழார் பெருமான் இவ்வாறு தமது கொள்கையை வற்புறுத்துவது காண்க. இது நிற்க. அவ்வாறு பாய்ந்தெழுவதை, மாலையில் மொய்த்த சுரும்பி னம் திடுக்கிட்டுக் கொம்மெனப் பொங்கி எழுவதாலேயே, உணர்கின்றோம். இமைப்போதில் அவனை வாயிலின்

வெளியே காண்கின்றோம்

படை எழுச்சி:.

29.

"தந்திரத் தலைவர் தாமுந் தலைவன்றன் நிலைமை கண்டு வந்துறச் சேனை தன்னை வல்விரைந் (து) எழமுன் சாற்ற அந்தரத்(து) அகலம் எல்லாம் அணிதுகிற் பதாகை தூர்ப்ப எந்திரத் தேரும் மாவும் இடையிடை களிறு மாகி." "வில்லொடு வேல்வாள் தண்டு பிண்டிபா லங்கள் மிக்க வல்லெழு முசலம் நேமி மழுக்கழுக் கடைமுன் னான பல்படைக் கலன்கள் பற்றிப் பைங்கழல் வரிந்த வன்கண் எல்லையில் படைஞர் கொட்புற்(று) எழுந்தனர் எங்கும்எங்கும்." 30. "சங்கொடு தாரைகாளந் தழங்கொலி முழங்கு பேரி வெங்குரற் பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி

பொங்(கு)ஒலிச் சின்னம்எல்லாம் பொருபடை மிடைந்த பொற்பின் மங்குல்வான் கிளர்ச்சி நாண மருங்கெழுந் தியம்பி மல்க."

31.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/57&oldid=1559696" இலிருந்து மீள்விக்கப்பட்டது