48
அன்பு முடி
"துரியத் துவைப்பு முட்டுஞ் சுடர்ப்படை யொலியும் மாவின் தார்மணி யிசைப்பும் வேழ முழக்கமுந் தடந்தேர்ச் சீரும் வீரர்தஞ் செருக்கி னார்ப்பு மிக்கெழுந் தொன்றாம் எல்லைக் காருடன் கடைநாட் பொங்குங் கடல்என கவித்த வன்றே." 32. “பண்ணுறு முறுப்பு நான்கிற் பரந்தெழு சேனை எல்லாம். மண்ணிடையிறுகான் மேன்மேல் வந்தெழுந் ததுபோல் தோன்றத் தண்ணணிக் கவிகை மன்னன் தானைபின் தொடரத் தானோர் அண்ணலம் புரவி மேல்கொண் டரசமா வீதி சென்றான்.
33.
குறிப்பறிந்துதவும் படையாளரும், அவன் நிலைமை கண்டு, படைதிரளுமாறு ஏவுகின்றனர். வார்கழல் கட் டிய படைஞர்கள்,வில்,வேல்,வாள்,தண்டு, பிண்டிபாலம், முசலம், நேமி, மழு, கழுக்கடை முதலான் பல படை களைக் கையிற்பற்றி, இடமும் வலமுமாகச் சுற்றிக் கொண் டெழுகின்றனர். இவர்களிடையே, பொறிகள் அமைந்த தேரும், குதிரையும், களிறும், நெருங்கி வருகின்றன. இப்படை ஏந்திய துகிற்கொடிகள், வானத்தைத் தூர்த்து விடுகின்றன. சங்கு, தாரை, காளம், பேரி, பம்பை, கண்டை, துடி,திமிலை, தட்டி, சின்னம் என்ற ஒலிக்கருவி களும், முகிலிடியும் வெட்குமாறு படையிடையே நெருங்கி எம்மருங்கும் ஒலிக்கின்றன. ஒலிக்கருவியின் ஒலிமட்டுமா அங்குக் காண்கின்றோம்? ஒலிக்கருவியின் ஒலி ஒருபால்; படையோடு படைதாக்கி ஒளிவிட்டெழும் ஒலி ஒருபால்; குதிரையின் கழுத்திற் கட்டிய மணிக்கோவையின் ஒலி ஒரு பால்; களிறுகளின் ஒலி ஒருபால் ; தேரோட்டத்தின் ஒலி ஒரு பால்; படைஞரின் செருக்குப்போல் எழும்ஆர்ப்பொலி ஒரு பால்; இவையனைத்தும் ஒன்றாகிக் கடையூழியில் பெருமழை பொழியும்போது கரையுடைத்துப் பொங்கும் கடல்போல