கடற் கொத்தளிப்பு
49
எதிர்தோன்றும் தோற்றத்தைக் காண்மின் படையோ கடல்; அதன் இயக்கமோ, காற்றாற் புரளும் அலையாட்டம்; துகிற் கொடியோ கருமுகில்கள்; ஒலியோ இடி என்றிவ்வாறமை தல் காண்க.பேரூழிப் பெருங்காற்று, மேலும் மேலும் உல கின்மேல் வீசுவதுபோல, தேர், களிறு, குதிரை, காலாள் என்ற நால்வகைப்படையும், மேலும் மேலும் விரைந்து பரவு கின்றன. றன. இவர்கள் பின்வர, மன்னவன் ஒரு குதிரைமேலேறி முன்னர் அரசர் வாழும் தெருவழியே வருகின்றான்.
தண்ணளிக் கவிகை:- இத்துணைச் சீற்றமும் இவ னது தண்ணளியாய் எழுகின்றதைக் காண்மின். சிற்றெறும் பும் வெம்பி வாடாதபடி தன் குடைக்கீழ் நிழலில் உயிர்களை வைத்துக் காப்பவன், யானையும் மாவெட்டிகளும் சாவக் கண்டு வாளா இருப்பானோ? அவ்வருள் கருதியே அவ்வாறு வருகின்றான் என அவனது கவிகைமேல் வைத்துப் புனைந் துரைக்கின்றார் சேக்கிழார். மிக விரைவாகக் குதிரையை நடத்திவந்து, களிறும் மாவெட்டிகளும் வீழ்ந்து கிடக்கும் இடத்தைச் சேர்கின்றான் அவ்வேந்தன்.
புகழ்ச் சோழர் நிலை: - புகழ்ச்சோழரது நிலையையும், ஒப்புமை கொண்டே விளக்குகின்றார், சேக்கிழார்; காற்றும் மழையும் கலந்தடிக்கக் கலங்கிநிற்கும் கடையூழிக் கடலை இங்கு ஒப்புமை கூறுகின்றார்; இன்பமாலை யணிந்த இன்பக் கடல் இவ்வாறு கலங்குகிறது எனக் குறிக்கின்றார். பெருஞ் சீற்ற நிலையைப் பேச்செழாத பெருநிலையாகப் புனைந்துரைத் தல் காண்க. சிறுபுலவரே இந்நிலையில் புகழ்ச்சோழரைப் பேச வைப்பர். என்ன பேசக்கூடும்? ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ற ஒப்புமையைச் சேக்கிழார் எடுத்துக்கூறும் தகுதியும் பாராட்டற்பால் தொன்றேயாம்; கடுங்காற்றும், கருமலையும்,
4