அ. நான்காம் காட்சி- முடிச்சு
மனமாற்றம்:-மேலே நான்காம் காட்சியில், புகழ்ச் சோழனும் எறிபத்தரும், நிலைமாறி நிற்பதையும், மனமாறி நிற்பதையும்,படிப்படியாகத் தெளிவுபடுத்துகின்றார் சேக்கி ழார். ஓவியப்புலவர் முதலானோர் காட்டமுடியாத மனமாற் றத்தினைப் பாவாணப்புலவரே காட்டக்கூடும். இதனைப் புனைந்துரைக்குமிடந்தான் பாக்களின் உயிர்நிலை. பெரும்புல வரே இதனைப் புனைந்துரைக்க முன்வருபவர். மற்றையோர் ஓவியப் புலவ ரளவிலே நின்றுவிடுவர். இம்மனமாற்றத்தைப் புனைந்துரைப்பதிலேதான், சேக்கிழாரின் திருவருட்சிறப்பைக் காண்கிறோம். புகழ்ச்சோழரும் எறிபத்தரும் ஒருவரை ஒரு வர் எதிர்ப்பட்டு, ஒருவர் ஒருபால் மனமாறி நிற்கின்ற வியப் பினைச் சேக்கிழாரே பாடத்தக்கார்; இதிலே புகழ்ச்சோழர் மாறுதலடைவதனை முன்னும், எறிபத்தர் மாறுதலடைவ தனைப் பின்னுமாகப் பாடுகின்றார். இக்காட்சியில்தான் யாம் கூறிய கடவுட்பிணையல் எழுகின்றது.
கடுவிசை முடுகிப் போகிக் களிற்றொடும் பாகர் வீழ்ந்த படுகளம் குறுகச் சென்றான் பகைப்புலத் தவரைக் காணான் விடுசுடர் மழுஒன்(று) எந்தி வேறிரு தடக்கைத் தாய அடுகளி றென்ன நின்ற அன்பரை முன்பு கண்டான்." "பொன்றவ ழருவிக் குன்றம் எனப்புரள் களிற்றின் முன்பு நின்றவர் மன்றுள் என்றும் நிருத்தமே பயிலும் வெள்ளிக் குன்றவர் அடியார் ஆனார் கொன்றவர் இவர் என்று, ஓரான் வென்றவர் யாவர் என்றான் வெடிபட முழங்கும் சொல்லான்." "அரசனாங் கருளிச் செய்ய அருகுசென் றணைந்து பாகர்
விரைசெய்தார் மாலை யோய்நின் விறற்களிற்றெதிரே நிற்கும்
34.
35.