52
அன்பு முடி
திரைசெய்நீர் உலகின் மன்னர் யாருளர் தீங்கு செய்தார் பரசுமுன் கொண்டு நின்ற இவர்எனப் பணிந்து சொன்னார்." 36.
அன்பரை முன்பு கண்டான்:-யானை எதிரே, அரசன், பகைவரைக் காண்கின்றான் இல்லை; மழுவேந்திய செருக் கொடுநின்ற அன்பரையே காண்கின்றான்; பொன்றவழருவிக் குன்றம்போலச் செங்குருதி யருவியாய்ப் புரளக்கிடக்கும் களிற்றினைக் காண்கிறான். கறைபட்ட மழுவைக் கண்டும் 'அவரே கொன்றவர்' என உய்த்துணர்கின்றானோ? மறந்தும், 'மனத்தால் சிவனடியார் கொல்வர்' என எண்ணான். அம்ப லத்தே இன்பக் கூத்தாடிக் குணப்பெருங்குன்றாய் வாழும் புனிதனாரது வாலிய இன்பவழி நிற்கும் அடியாரன்றோ இவர்! இன்பமல்லது துன்பத்தைத் தரும் கொலைத்தொழில் புரிவரோ? 'தூயநெறி நின்றார் கொலை நெறி நில்லார்' என்று எண்ணிய அச்சோழன் 'இவர் கொன்றார்' என எவ்வாறு அறிவான்? சோழன், அன்பர்களைப் பற்றிக் கொண்டிருந்த உயர்ந்த கருத்தும், அந்நாளைய அன்பரது பெருமையும் இத னால் நன்றாக விளங்குகின்றனவன்றோ? இக்கொள்கையை வற்புறுத்திப் பாடும் பெரிய புராணத்தைக் கொலை நூல் என்று எங்ஙனம் கூறுவது? அரசன், கொன்றவரை அறியா தவனாய் அருகே இருப்பவர்களை, "வென்றவர் யாவர்?” என வினவுகின்றான்.சிவனடியாரது உயர்வை அறியும் சீரிய அறிவு கலங்கா நிலையிலிருக்கின்றானேனும், சினம் மாறியபாடில்லை வெடிபட முழங்கி, "வென்றவர் யாவர்' எனக் கேட்கின் றான் இவ்வரசன். இச்சோழனுடைய சினம் இவன் கைக் கடங்கி நிற்கின்றது; 'வா' என்றால் வரும்; 'போ' என்றால் போகும். அதற்கு இவன் அடிமையல்லன். அஃதே