பக்கம்:அன்பு முடி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிச்சு

53

இவனுக்கு அடிமையாகிறது. ஆதலின் அடியவர் இனமென் னும் ஏமப்புணையைச் சுடுகின்றதில்லை.

"விரை

வெற்றியா தீங்கா?: "வென்றவர் யாவர்' என்ற கேள் வியில் மற்றொரு குறிப்பும் காட்டுகின்றார் சேக்கிழார் பெரு மான். இந்தக் கொந்தளிப்பனைத்தும் யானை வெட்டுண்டதா லன்றோ எழுகின்றது? புகழ்ச்சோழனது சீற்றத்தைக் கொண் டே எறிபத்தரது தறுகணாண்மையை அளத்தல் வேண்டும். யானையை வெட்டிய செய்தியைத் தன்னை வென்ற செய்தி யாகவே புகழ்ச்சோழன் கருதுகின்றமையை, 'வென்றவர் யாவர்' என்ற கேள்வியால் விளக்குகின்றார் நம் புலவர். அவ் வாறு அரசன் வினவ, மாவெட்டிகள் அருகே வந்து, மலர் மாலையை அழகொப்பனையாகக் கொண்டோய்! இவ் வானையை எதிர்த்து நிற்கும் ஆற்றலுள்ள மன்னரும் உலகில் உளரோ? பகைவர் பிறர் இல்லை.பகைத்து வென்றவர் ஒரு வரும் இல்லை. ஈதோ மழுவேந்தி நிற்பவரே இத்தீங்கு செய் தார்' என அவனடி வணங்கித்தெரிவிக்கின்றனர்."வென்றி எனப் பாராட்ட மனமில்லாது, இதனைத் தீங்கு என்று கூறும் மாவெட்டிகளது மன நிலையைக் காண்க. அரசன் கொள்ளையோ அழகிய வென்றி; ஏழையின் கொள்ளையோ தீய திருடு. ஈதே மாவெட்டிகளது கொள்கை. அழுக்காற்றி னாலும் பகையினாலும் பிறரது உயரிய செய்கைகளையும் பழித் துரைக்கும் மாவெட்டிகளது கீழ் நிலையையும், தன்னைக் கொன்றாலன்ன தீமைபுரியும் பகைவரிடத்தே உயரிய செய் கைகளைக் கண்டபோது அதனை வென்றி எனப் பாராட்டும் அரசனது உயரிய நோக்கத்தையும் இரண்டொரு சொல்லில் விளக்கிவைக்கும் சேக்கிழாரது பெருமையை என் என்போம்!

1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/63&oldid=1559702" இலிருந்து மீள்விக்கப்பட்டது