பக்கம்:அன்பு முடி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அன்பு முடி

குழையணி காதினானுக் கன்பர் பிழைபடின் அன்றிக்

கொல்லார்:

"குழையணி காதி னானுக் கன்பராங்

குணத்தின் மிக்கார்

பிழைபடின் அன்றிக் கொல்லார்

பிழைத்த(து)உண்டு என்(று) உட்கொண்டு

மழைமத யானை சேனை

வரவினை மாற்றி மற்ற

உழைவயப் புரவி மேல்நின் (று)

இழிந்தனன் உலக மன்னன்"

37.

"மைத்தடங் குன்று போலு மதக்களிற் றெதிரே இந்த மெய்த்தவர் சென்ற போது து வேறொன்றும் புகுதா விட்ட அத்தவம் உடையே னானேன் அம்பல வாண ரன்பர் இத்தனை முனியக் கெட்டேன் என்கொலோ பிழையென் றஞ்சி'"

[38.

"செறிந்தவர் தம்மை நீக்கி யன்பர் முன் றொழுதுசென்றுஈ (து) அறிந்திலே னடியே னங்குக் கேட்டதொன் றதுதான் நிற்க மறிந்தஇக் களிற்றின் குற்றம் பாகரோ(டு) இதனை மாள எறிந்ததே போது மோதான் அருள்செய்யும் என்று நின்றார்" 39. "சிவனடியார்களோ திருநின்ற செம்மையே செம்மை

யாகக்

கொண்டவர்கள்" என்ற உறுதிக்கொள்கையைச் சீற்றம் மிக்க போதும் மறக்கின்றானில்லை அரசன். "இன் னிசைப்பாவாணரையே குழையெனக் காதில் அணிந்து இன் னிசை இன்பமாய் விளங்கும் இறைவனது அன்பர்களே இன்ப அருவி பாயும் குணப்பெருங்குன்றாவர். அத்தகையா னின் அத்தகைய அடியார், தம் திறத்தன்றி பிறர் திறத்தேயும் பிழைப்பட்டிருந்தால்தான் பெருங்களிற்றைக் கொல்வர்.உயி ரைக்காப்பதே உயர்ந்தோர் பெருமை. பிறருயிரைக்காக்கவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/64&oldid=1559703" இலிருந்து மீள்விக்கப்பட்டது