முடிச்சு
55
இவ்வாறு செய்திருப்பர். இவ்வானை எவரை எல்லாம் கொல் லச் சென்றதோ? அதனைத் தடுக்கப்புக்கபோது, வெட்டும் இதன்மேல் வீழ்ந்ததோ ?"-இவ்வாறு எண்ணமிடுகின் றான் புகழ்ச்சோழன். களிறும் மாவெட்டிகளுமே தவறு செய்திருத்தல் வேண்டும் என முடிவுகட்டுகின்றான்; யானை யும் படையுமாய்ப் பின் வருகின்றவற்றை நிறுத்திவிட்டுத் தானும் குதிரையினின்றும் இழிந்து கால்நடையாக அன்ப ரெதிரே போகின்றான். காற்றும் கடலும் என வந்தவன் அடியவரைக் கண்டதும் கால்நடையாகப் போதலை இவ்வாறு அழகுபடப் புனைந்துரைக்கின்றார் சேக்கிழார்.இம்மனமா ற் றத்தை ஓவியப் புலவர் எழுத இயலாது. கடுங்காற்றென வந் தோன் தென்றல் என உலவுகிறான்; அம்மட்டுமா? இரக்க மும் கொள்கிறான். "மதர்த்த கருங்களிற்றின் எதிரே, உண்
மை
நோன்
நோன்புடைய இப்பெரியார் போயபோது, இவர்க்கு வேறொரு கெடுதியும் நேரிடாமற் போனதும் எனது பின் பயனே அன்றோ? யான் செய்த நோன்பே நோன்பு. இன்பக் கூத்தாடுகின்ற இறைவனின் அன்பர், இன்பமாய் இருப்பதே இயல்பு. அவ்வியல்பு கெட முனிவோடும் முகங் கோணி நிற்கச் செய்த பிழைதான் யாதோ?" என்று அஞ்சா மன்னரும் அஞ்சுகின்றார். தம்முடன் வருகின்றோரை ஒரு புறத்தே நீக்கித் தாம் மட்டும் தமியராய்ச் சென்று அன்ப ரைத் தொழுகின்றார்.
போதுமா?:- "அறிந்திலேன் அடியேன்; அங்குக் கேட்ட தொன்று. (சிலர் கொன்றனர்' என்றன்றோ காவலர் வந்து சொல்லினர்.) அது நிற்க. (இவ்வாறு தாம் வந்த கோலத் தைச் சோழனார் விளக்குகின்றார்) நல்வழியின் நின்றும் பிறழ்ந்த இந்தக் களிறு செய்த குற்றத்திற்காக இதனையும்