முடிச்சு
"வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார், தொழுது நின்றே ‘ஈங்குஎனை வாளினாற்கொன்(று) என்பிழை தீர்க்க வேண்டி ஓங்கிய உதவி செய்யப் பெற்றனன் இவர்பால்' என்றே
6C
57
ஆங்(கு)அவர் உவப்பக்கண்ட எறிபத்தர் அதனுக்(கு) அஞ்சி." 44. 'வன்பெருங் களிறு பாகர் மடியவும் உடைவாளைத்தந்(து) என்பெரும் பிழையி னாலே என்னையும் கொல்லும் என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைத்தனன்' என்று கொண்டு 'முன்(பு)என(து)உயிர்செகுத்துமுடிப்பதே முடிவு' என்று எண்ணி.”
45.
"புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர்தம் கழுத்திற் பூட்டி அரிந்திடல் உற்றபோதில் அரசனும் 'பெரியோர் செய்கை இருந்தவா (று)இதுஎன்கெட்டேன' என்(று) எதிர் கடிதிற்சென்று பெருந்தடந் தோளாற் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்."46.
'ஈது இங்கு நிகழ்ந்தது':- வானவர்க்கும் தலைவனான
கடவுளோடு அன்புறவன்றி வேறோருறவும் கொண்டாடாது, அவ்வன்புவழியே உலகுக் குதவும் திருநெறியில் நிற்கின்ற எறிபத்தர், அரசருக்கும் அஞ்சாதவராய் எதிருரை பகர்கின் றார். "வாழிய அரசே" என்று தொடங்கிப் பேசவும் அவர் மனம் ஒருப்படவில்லை. அவருடைய சினம் அரசனளவும் சென்றதாகலின். அவ்வாறு பேசத்துணிவரோ? "சென் னியே! பொல்லாத பொல்லாத பாம்பையும் அழகொப்பனையாகக் கொண்டு இன்பமெனத் தோன்றச்செய்யும் இறைவனுக்கு, அழகொப்பனை செய்யவேண்டிச் சிவகாமியாண்டார் கொய்து வந்த நல்ல மலர்களை, இந்த வேழம் பறித்துக் கீழே சிந்தியது. பூப்பட்டபாடு இக்களிறும் பட்டுத் தரையில் வீழ்ந்து புரளும்படி இதனைத் துணித்தேன். இவ்வாறு இவ்வானை தீங்கு செய்தபோது, இதனை மாவெட்டிகளும் குத்துக்