பக்கம்:அன்பு முடி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58.

அன்பு முடி

கோலாளரும் விலக்கினார் இல்லை. ஆதலின் அவர்களும் இறந்தனர்.ஈதே இங்கு நிகழ்ந்தது" என்று நிகழ்ந்தது கூறு கின்றார் எறிபத்தர்.

தீர்வுநேர்வார்:-இறைவனது அடியாருக்குச்செய்த இக் குற்றம் தம்மையே சேர்ந்ததென புகழ்ச்சோழர் மனமுருகு கின்றார்.

"நீயுந் தவறிலை நின்னைப் புறங்கடைப்

போதர விட்ட நுமரும் தவறிலர்

நிறையறு கொல்யானை நீர்க்கு விட்டாங்குப் பறையறைந் தல்லது செல்லற்க என்னா இறையே தவறு டையான்."

கலித்தொகை

என்று புலவர்களும் ஒப்புமையாக எடுத்துக் காட்டுவது 'யாது? நிறையழி கொல் யானையை நீர்க்கு விடுதலேயன்றோ? யானே தவறுடையேன். ஆதலின் என்னையும் கொல்லுதல் வேண்டும். எனக்காக இறந்த யானையும் மாவெட்டிகளும், அந்த வழியில் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராய்த் தலைசிறந்து நின்றனர்; அதனால், உமது மழுவாற் கொல்லப் படும் பேறுபெற்றனர். அன்பர்க்குதவும் அன்பு வடிவாம் அம்மழுவோ, நல்லனவற்றிலெல்லாம் நலம் மிகச் சிறந்தது. இக்கொடுமை அனைத்திற்கும் முதலாக நின்ற என்மேல் பட்டு அம்மழுவானது தூய்மை குறைதல் தகாதன்றோ? யானும் கொலையுணல் வேண்டும்! மழுவுங் கொல்லுதல் தகாது. ஆதலின் என் வினையே என்னைச் சுடுவதுபோல என் கை வாளே என் கழுத்தை அரிவதாக" என்று புகழ்ச்சோழர் தம் உடைவாளை உறையினின்றும் எடுத்து நீட்டுகின்றார்.

சோழன் மாறிய நிலை:- தன்னையும் இழக்கும் தனிப் பேரன்புநிலையை, இவ்வாறு படிப்படியாய் விரித்துரைத்து முடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/68&oldid=1559707" இலிருந்து மீள்விக்கப்பட்டது