முடிச்சு
59
வில்,உயர் நிலையையும் புனைந்துரைக்கும் சேக்கிழார் பெரு மையே பெருமை. இவ்வாறு கழுவாய் இயற்ற ஒருப்படு கின்றார், காற்றொடு கடலெனவந்த காவலர் பெருமானார். கொன்றும் சிவந்த அவரது கை - கொடுத்தும் சிவந்தகை இன்று தன்னையுமிழக்கத் தந்துதவும் கையாய் இயற்கை யழகு எழில்பெற நிற்கிறது; அவ்வின்பத்தால் சிவந்தகையாய் விளங்குகிறது. நீட்டிய வாளோ நன்றாகத் தீட்டப்பட்டு, மூண்ட நெருப்புப்போலப் பளபள என்று மின்னுகிறது. எவ்வாறு கடலானது கொந்தளிப் படங்கிக் கரையிலடங்கு வதனையும், அலைகடல் வாளளவாய்க் குறுகி அன்பர் கை யிடை நிற்பதனையும், ஓவியமாகச் சேக்கிழார் எழுதிக் காட்டுகின்றார்.
தீங்கு தீர்ப்பார்:-மேலே எறிபத்தர் மனமாறுவதனையும் ஓவியமாக நம் புலவர் எழுதிக்காட்டுகின்றார். எறிபத்தரது சீற்றம் அரசன்வரையிலும் சென்றது எனக் கண்டோம். ஆனால், புகழ்ச் சோழனார் வாளை நீட்டியபோது அச் சீற்றம் மறைகிறது. எறிபத்தர் ஒரு புதிய உலகில் புகுகின்றார்;காற் றோடு கலந்த தீயெனப் பொங்கி வெதும்பியவர், தீயிடை வைத்த நெய்யென உருகிப் பின், உள்ளங் குளிர்கின்றார். "கெட்டேன்! தம்மையும் இழந்து நிற்க, எதிர் வந்து தம் வாளைநீட்டித் தமதுயானையைக்கொன்ற என்னையே தம்மைக் கொல்லுமாறு வேண்டி நிற்கும் இவரினும், பெரும்புகழ் பெற்றார் யாரே? இவருடைய அன்புக்கும் அளவு உண்டோ? சிவகாமியாண்டார் மலர் இழந்தபோது, யானோ அவ்விழ வுக்கு மனம்பொறாது, யானையைக் கொன்றேன்.இவரோ அவ்விழவுக்கு மனம்பொறாது, தம்மையே கொல்ல வாளை நீட்டுகின்றார். தன்னிழவிற் றழைத்தோங்கும் தனிப்பெரும்