601
அன்பு முடி
அன்புதான் இருந்தபடி என்னே! 'அன்பிலார் எல்லாம் தமக் சூரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்றபடி பிறர்க்கென்றே உடலும் உயிரும்பெற்று வாழும் பெரியார் அல்லரோ இவர் . யானோ பிறருயிரைப்பிறர்க்கெனக் கொண்டு வாழ்ந்தேன்.என்னுயிரைப் பிறர்க்கெனக் கொண்டு வாழ்ந் தேனோ? இப்பெரியாரது உடைவாளாம் இவ் அன்பின் கொழுந்தையே வாங்கி இவரையே வெட்டுவதோ? எண்ண வும் போமோ இவ்வாறு?" என்று வாளை வாங்காது,வாளா நிற்கின்றார் எறிபத்தர். இதற்குள் மற்றோர் எண்ணம் தோன்று கிறது. 'தம்மைத் தாமே கொன்று கொண்டால், என் செய் வது?” என உணர்ந்தபோது, அதற்கஞ்சி,அத்தீங்கு நேரிடாத வாறு, வாளை அரசர் கையினின்றும் வாங்கிக் கொள்கின்றார். மெய்த்தொண்டர்.
‘ஓங்கிய ய உதவி செய்யப் பெற்றேன்'-வாங்கியபோது மன்னவனார் முன்னினும் பெருமகிழ்ச்சி யடைகின்றார். தம்முயிரை இழக்கும்போதும் இன்பமே அடைந்து நிற்கும் இன்ப அன்பின் இயல்பினை இவ்வாறு விளக்குகின்றார் சேக் கிழார். தாம் அரசநெறி கோடியதற்கு எறிபத்தர் கழுவாய் செய்ய நோந்தமையைக் கண்ட புகழ்ச் சோழனார், ஏறி பத்தரைப் புகழ்கின்றார்; "ஈங்கு என் கை வாளினாற்கொன்று என் பிழை தீர்க்க வேண்டி, ஓங்கிய உதவிசெய்யப் பெற்ற னன் இவர்பால்," என்று மகிழ்கின்றார். கடமைக் கஞ்சிக் கழுவாய் நேர்வார் ஒரு சிலர். அவர் நிலையும் வியக்கத்தக் கதேயாம். கடமையை யுவந்து கழுவாய் விரும்பும் பெரி யாரோ மிகச் சிலர்.
உவகை கண்டு அஞ்சுதல்:- அவ்வாறு உவப்புடன் நின்ற அரசரது ஒப்பற்ற நிலையைக்கண்டு அஞ்சுகின்றார் ஏறி