பக்கம்:அன்பு முடி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிச்சு

61

பத்தர்; "தம்முடைய வெற்றியானையையும், மாவெட்டிகளை யும், நான் கொன்றதைப் பொருட்படுத்தாது, என் பெரும் பிழையினாலே என்னையும் கொல்லும்,என்னும் அன்பனார் தமக்குத் தீங்கு நினைத்தனன். நானொரு கொடியேன். நானே கொலைக்குரியேன்", எனத் தம்மைப்பழிக்கின்றார் எனது உயி ரைச் செகுத்து முடிப்பதே முடிவு' என அவர் முடிவுகட்டுகின் றார். மன்னவனார் விரும்பிக் கொடுத்த வாளை, எறிபத்தர், தம் கழுத்திற்பூட்டி அரியத் தொடங்குகின்றார். புகழ்ச் சோழர், தம்மை யிழந்துநின்று வாளை நீட்டியபோது, அவ்வழியாக அன்பெனுந் தீ எறிபத்தரிடமும் பரவி மூண்டெரிவதால், அவரும் தம்மை இழந்து நிற்கும் அன்பொளியாக விளங்கு கின்றார். அவ்வகையில் எறிபத்தர்க்குப் புகழ்ச்சோழனார் ஒரு வழிகாட்டியல்லரோ?

பரிவில் வந்த இடுக்கண் :- காண்கின்றார்

அரசர்.

"அந்தோ! இவர் கொலைக்குமா என் வாள் துணையாதல் வேண்டும்? இப்பெரியாரது செய்கை இருந்தவாறென்னே! என்னைக் கொல்வார் எனமகிழ்ந்தேனே! இவரோ கொலையுண் பது: கெட்டேன் என்று வருந்தி விரைந்துபோய்த் தமது அகன்றதோளால் தம்வலி யெல்லாம் கொண்டு எறிபத்தர் வாளையும் கையையும் அசைக்க முடியாதபடி இறுகப் பிடித் துக்கொள்கின்றார். இவ்வாறு இருவரும் அன்பினால் முடிச்சுப்பெற்றுப் பிணைந்து விளங்குகின்றனர். ஈதே கடவுட் பிணையல். இதே அன்பு முடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/71&oldid=1559710" இலிருந்து மீள்விக்கப்பட்டது