கூ.ஐந்தாங் காட்சி - முடி அவிழ்த்தல்
"வளவனார்விடாது பற்ற மாதவர் வருந்து கின்ற அளவிலாப் பரிவில் வந்த இடுக்கணை யகற்ற வேண்டிக் களமணி களத்துச் செய்ய கண்ணுதல் அருளால் வர்க்குக் கிளரொளி விசும்பின் மேல்வந்(து)எழுந்தது பலரும் கேட்ப." 47.
'தொழுந்தகையன்பின் மிக்கீர் தொண்டினை மண்மேற்காட்ட செழுந்திரு மலரை யின்று சினக்கரி சிந்தத் திங்கட் கொழுந்தணி வேணிக் கூத்தரருளினாற்கூடிற்(று) என்றங் (கு) எழுந்தது பாக ரோடும் யானையும் எழுந்த தன்றே.
48.
"ஈரவே பூட்டும் வாள்விட்(டு) எறிபத்தர் தாமும் அந்த நேரியர் பெருமான் தாள்மேல் விழுந்தனர். நிருபர் கோனும் போர்வடி வாளைப் போக எறிந்தவர் கழல்கள் பற்றிப் பார்மிசைப் பணிந்தார் விண்ணோர்பனிமலர் மாரிதூர்த்தார்."49.
திருவருண்மொழி:- ஐந்தாவது காட்சியிலே, இக்கட வுட் பிணையல் அவிழ்தலால் அன்பொளியும் அன்பு மண மும் வீசிக் கமழ்வதனை நுகர்கின்றோம். மேற்கண்ட சிக் கல் முடிச்சை அவிழ்ப்பவர் யார்? திருவருளே அவிழ்த்தல் வேண்டும். திருவருளுலகிடையே இருந்தன்றோ, திருவருண் மொழிப் புலவராம் சேக்கிழார் தமது நூலைப் பாடுகின்றார். இறத்தற் கில்லையே என்று இருவரும் இடுக்கண் உற்றுச் சிக்கிக் கிடக்கின்றனர். திருவிளையாடல் புரிந்தருளும் இறை வனுக்கும் இதனைக் காணப் பொறுக்க முடியவில்லை. நல்லன வும் தீயனவும் எல்லாம் அவன் செயல் அன்றோ? நஞ்சுண்டு காப்பான்; கண் திறந்து எரிப்பான். ஆக்கலும் வல்லான்; அழித்தலும் வல்லான். அவனுடைய திருவிளையாடல் இருந்தபடி அது. இறைவன் இங்கும் யானையைக்"கொன்று