பக்கம்:அன்பு முடி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடி அவிழ்த்தல்

63

இவர்களையும் இடுக்கணில் நிற்க வைக்கின்றான்; கொன்றது போக அருள்செய்யவும் வருகின்றான். அனைவரும் கேட்க அங்கே வானிடைத் திருவருண்மொழி எழுகின்றது. "எல் லாம் திருவருட் செயல்" என்பது எல்லார் காதிலும் விழு கிறது. அனைவரும் புத்துயிர் பெறுகின்றனர். இறந்தவர் ழுகின்றனர். எறிபத்தர் ஈரவே பூட்டும் வாளைப் போக விட்டு, சோழனார் தாள் மேல் விழுகின்றனர். சோழர் பெரு மானாரும், போர் வடிவாளைப் போக எறிந்து, எறிபத்தரது கழல்களைப் பற்றிப் பார்மிசைப் பணிகின்றனர். இடுக்கணால் கழுந்த பிணையலைக் கண்டோம்; இதுபோது இன்ப அன் பினால் எழுத்த பிணையலைக் காண்கின்றோம்.வானவரும் கண்டு மலர்மாரி சொரியத்தக்க காட்சியன்றோ ஈது. இந்நிலையில் மறையவர் என்றும் மன்னர் என்றும் வேற்றுமை இல்லை.

குறைவெல்லாம் நிறைவாதல்:-

50.

"இருவரும் எழுந்து வானில் எழுந்தபேர் ஒலியைப் போற்ற அருமறைப் பொருளா யுள்ளார் அணிகொள் பூங்கூடைதன்னில் மருவிய பள்ளித் தாமம் நிறைந்திட வருள மற்(று)அத் திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்." "மட்டவி ழலங்கல் வென்றி மன்னவர் பெருமான் முன்னர் உள்தரு களிப்பி னோடும் உறங்கிமீ(து)எழுந்த(து) ஒத்து முட்டவெங் கடங்கள் பாய்ந்து முகிலென முழங்கிப் பொங்கும் பட்டவர்த் தனத்தைக் கொண்டு பாகரும் அணைய வந்தார்."51

'அன்பர்க்குத் தீங்கிழைத்தோம்' என்று மனம்வாடிய சோழர் பெருமானார், அவ்வருண்மொழிகேட்டு மனந்தளிர்க் கின்றார்; அவ்வருளைப் போற்றுகின்றார். எறிபத்தரும் அம் மொழிகேட்டு வியப்படைந்தவராய் அருளை ஏத்துகின்றார். மலரும் கூடையில் நிறைகிறது. சிவகாமியாரும் குறை தீர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_முடி.pdf/73&oldid=1559712" இலிருந்து மீள்விக்கப்பட்டது