பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

99


பின்னர் நம்மிடம் புன்மைச் செயல்கள், பகைமை விளைக்கும் செயல்கள்; தன்னலமிக்க செய்கைகள், கசப்புணர்ச்சி தரும் பணிகள், சொற்கள் உண்டாகா. ஆகவே அன்பு எண்ணமும் அன்புச் செயல்களும் அன்பு மொழிகளும் மென்மையானவை; அழகானவை, அழியாதவை.

நம்முடைய சொற்களையும் புலன் அறிவு சார்ந்த சொற்களையும், அன்பினில் போட்டு ஊற வையுங்கள். ஊறிய பின்பு அதே சொற்கள்; நம் வாயில் இதழில் தவழும் போது, அன்பின் அழகு திகழ, அன்பின் மணம் கமழ, அன்பின் மென்மை குலவ வெளிப்படும். இத்தனைக்கும் அப்பாற்பட்டுச் சிறப்பும் வனப்பும் மிக்கவையாக இருக்கும் என்றால் மிகையில்லை.

அப்படிப்பட்ட அற்புத அன்பு நிறைந்த சொற்களை, நம் பேச்சில் ஒளிர வேண்டாமா? வன்மமும் வன்முறையும் நிறைந்த சொற்களை இனியும் பேசுதல் வேண்டா. அன்பில் ஆழ்ந்த, அன்பில் தோய்ந்த சொற்களை நெஞ்சில் சேர்ப்போம், சேர்த்து வைத்த புதுச்சொற்களைக் கொண்டு இனிப் பேசுவோமே.

அன்புச் சொற்களை, எங்கும் நிறைந்து பரவும் காற்றில் கலந்திடப் பேசுவோம்.

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஆடவர் மகளிர் அனைவரோடும் பேசி, நடந்து கொள்ளும் அத்தனையும் அன்பின் உறுதுணையால் நடைபெறல் வேண்டும். நாம் மானுட இனம்; மக்கள் அல்லரோ? நாம் இயேசு வாழ்ந்த வாழ்க்கையினை மேற்கொண்டு வாழ்தல் வேண்டும். அந்த அன்பு வாழ்க்கை இயேசுவில் எப்படியெல்லாம் இழைந்து இயைந்து இருந்ததோ அதே போன்று நம் வாழ்விலும் இயேசுவின் அவ் அன்பு வாழ்க்கையை இழைய இணையவிடல் வேண்டும்.

இயேசுவின் அன்பினைப் போன்ற அன்பினை நம் நெஞ்சங்களை ஆளும் ஆட்சியாகக் கொள்ள வேண்டும் எதுவரையில்? நெஞ்சத்திலிருந்து பிறந்து வரும் எண்ணம் ஒவ்வொன்றும் அன்பாக; அன்பான எண்ணங்களிலிருந்து வெளிப்படும். சொற்கள் எல்லாம் அன்பில் தோய்ந்தனவாக, அமையும் வரையில். அள்ள அள்ள எப்போதும் - என்றென்றும்! ஏன் அன்பில் மலர்ந்த எண்ணங்கள் அன்பு மணக்கும் சொற்களாக மாறினால் தான்், மற்றவரை வாழ்த்தவும், அவ் வாழ்த்தினால் கிளர்ச்சி பெறவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/103&oldid=1219556" இலிருந்து மீள்விக்கப்பட்டது