பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அன்பு வெள்ளம்


1 கொரிந்தியர் 13:1-2 "நான் மாந்தர் மொழிகளையும் தூதர் மொழிகளையும் பேசினாலும், அன்பு எனக்குள் இராவிட்டால், ஓலமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடும் கைத்தாளம் போலவும் இருப்பேன்"

"நான் வருவதுரைக்கும் பேற்றை உடையவனாயிருந்து, அனைத்துப் புதிர்களையும், அனைத்து அறிவையும் அறிந்திருந்தாலும், மலைகளைப் பேர்க்கத் தக்கதாக அனைத்துப் பற்றுள்ள வனாயிருந்தாலும், அன்பு எனக்குள் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை”

பன்மொழி கற்றுத் தேர்ந்திடும் திறமை என்பது, சமய நுணுக்கம் வாய்ந்த கலை அறிவாராய்ச்சித் துறை சார்ந்த உலகில் ஒரு பெரிய அருஞ்செயலாக இருக்கலாம். ஆனால் அதனால் ஆவதொன்றும் இல்லை.

மேலுள்ளவற்றை நாம் மீண்டும் படித்துப் பார்த்தால் பொருள் புரிந்து கொள்ள முடியும். அதாவது மேற்சொன்ன உரையின்படி, நான் வருவதுரைக்கும் பேறு பெற்றவனாக இருந்தால் ஒரு நூற்றாண்டில் நடக்கப் போகும் நிகழ்ச்சிகளை முன் கூட்டியே சொல்லி விடமுடியும். உலகில் இதுவரை அறியப்படாத புதிர்களையும் பல்கலை அறிவையும் நான் அறிந்து கொண்டாலும், அன்பு எனக்குள் இராவிட்டால் நான் ஒன்றுமில்லை.

உலகின் மடியில் இருக்கும் எண்ணெய், உலோகங்கள், வேதியியல் பற்றிய கமுக்கங்களை எல்லாம் ஆய்ந்தாய்ந்து கூறு பலவாகக் காண்பதற்காக, உலோகவியல்களை வல்லாரும் வேதியியல் கலைவல்லாரும் மேற்கொள்ளும் போராட்டங்களைப் பற்றி அறிவோம் நாம். இத்துணைக் கலைகளில் தேர்ந்து விளங்கும் ஒருவர், இயேசுவானவர் உலகில் வாழ்ந்த நாள்களில் மலைகளையும் பேர்த்தெடுக்கும் பற்றார்வத்தைப் பெற்றிருந்ததைப் போன்ற செயலார்வம் பெற்றிருந்தாலும், இயேசுவின் அன்பினை ஒத்த அன்பினைப் பெற்றிராவிட்டால் அவர், "ஒன்றுமில்லை.”

இதற்கு மேலும் ஒருபடி சென்று நமக்கு உண்டானயாவற்றையும் நாம் அன்பளிப்பாகத் தந்தாலும் நம் உடலையே நன்கொடையாகக் கொடுத்தாலும் அன்பு நமக்குள் இராவிட்டால், நாம் ஒன்றுமில்லை.

அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய செல்வரும் வள்ளலுமான (Rockfeller) இராக்ஃபெல்லர் போலவும், கர்னகி (Carnage)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/110&oldid=1218299" இலிருந்து மீள்விக்கப்பட்டது