பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

49


கொண்டுள்ளது என்பதையும் நினைத்துப் பார்க்கிறோம். அன்பு வழியில் நடப்பதால், நாம் நமக்கு வந்துறும் நோய்களையும், பல்வேறு சூழ்சிலைகளையும் அடக்கி ஆளும் ஆற்றலர் களாகிறோம். ஆகவே, இயேசு காட்டிய அன்பு எனும் இடத்தை அடைந்து அவர் பேசிய அன்புமொழி பேசி, பேசி.படியே பணியாற்றியும் வருகிறோம்.

என்றும் வாழும் மொழியாகிய மறை மொழியில் விளக்கப் பெறும் இயேசுவின் திறனின் மெய்ம்மை விளக்கம் பெற நம்மை இணைக்கிறது அன்பு.

நம்மிடையே உள்ள பலர் இதனைக் கருத்தில் கொள்வதில்லை. அதனால் ஆதிச் சொல்லான மறை மொழியில், நோயுற்றவர்களைக் குணமாக்கும் ஆற்றல் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திலர். இறைவனைப் பாடித் துதிச் செய்யும்போதும், வேண்டுதல் - வழிபாடு செய்யும்போதும், திருமொழி எத்துணை வல்லமை பெறுகிறது! அதனை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

இயேசு இயம்பிய மொழியினை ஏற்று அதன்படி நடக்க முடியுமா? நாம் அன்புடன் விரும்பும் ஒருவர் ஒன்றைச் சொன்னால்போதும் உடனே அதனை விரைந்து செய்கிறோமே அதுவும் நம்மையறியாமலேயே! அதைப் போலே, உள்ளபடியே இயேசுவில் அன்பு கொள்ளுங்கள், பிறகு பாருங்கள். உடனே அவருடைய மொழி என்னவோ அதனை நம்மையும் அறியாமல் செய்கின்றோமா இல்லையா என்று பாருங்கள்!

இயேசுவை நம்ப வேண்டும்; அவரில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அதற்கென்று ஒரு முயற்சி தேவையா? மனம் தேவை! மனம் இல்லாதார் யார்? மனம் உள்ளவர் நம்பினால் என்ன? நம்பிக்கை வையுங்கள்! அன்புள்ளம் நம்பிட முயன்று கொண்டிருக்காது; அன்பார்விம் கொள்ள முயற்சி செய்யாது. அன்பு எனும் சொல்லே பற்றார்வம் கொள் என்றுதான்் வலியுறுத்துகிறது. அன்பு நாம் இயேசுவில் கொண்டுள்ள பற்றார்வத்தினை அளவற்ற தாகக்குகிறது.

எல்லாம் வல்ல கடவுளோடு அருளாளர் இயேசு கிறித்து வோடு இரண்டற - ஒன்றாதல் என்ன என்பதைப் பற்றி, இதற்கு முன்னால் தெரிந்திருந்தைவிட இப்போது நன்கு தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/53&oldid=1219212" இலிருந்து மீள்விக்கப்பட்டது