பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

அன்பு வெள்ளம்



ஏராளமான ஆண்களும் பெண்களும் மருத்துவர்களை அணுகி மருத்துவம் பெற வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்ட நோய்கள் பலவற்றிற்கும் அடிப்படைக் காரணம், மாந்தர் அன்பின்மையால் ஏற்படும் சினம், அதன் விளைவாக உண்டாகும் நரம்புத் தளர்ச்சியின் சீர்குலைவே ஆகும்.

ஒருவர் பொறாமை கொண்டார் என்றால், அப் பொறாமையே அவரது உடலில் பாயும் அரத்தத்தில் நஞ்சாக மாறும். வயிறு, நெஞ்சு தொடர்பான நோய்களைக் கொண்டு வரும்; அல்லது உடலெங்கும் ஒருவித தீடீர் உணர்ச்சி, எழுச்சி உண்டாகி உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கும்; அழிக்கும்.

பண்டைய நாள் முதல் இன்று வரை உலகில் போர் மூள்வதின் காரணம் என்ன? அஞ்சத்தக்க வன்மமாம் பகைமை - காழ்ப்புணர்ச்சி மாந்தரிடையே உண்டானதால்தான்். அத்தகு வன்மம், பகைமை - காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டதன் விளைவாகப் போரும் அதன் விளைவாக, மனித இனத்தின் குருதி ஒட்டத் திலேயே கலந்து மானிடப் பண்பினையே நஞ்சாக்கிவிட்டது. அதன் பின் விளைவு என்ன? மானிட ஒழுக்கத்தின் அழிவுக்கேடு உண்டாகிறது.

ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அவர்கள் நெஞ்சத்திலும் மனத்திலும் வன்மமாம் பகைமை தோன்றிவிட்டால் அவர்களை அதிலிருந்து யாராலும் மீட்கவே முடியாது. அப்படிப்பட்டவர் களின் மனத்தையும் குணமாக்கி நல்லவராகச் செய்திடவும் முடியாது.

யோவான் 1:4:7 "விருப்பத்துக்குரியவர்களே, ஒருவரில் ஒருவர் அன்பாக இருக்கக் கடவோம். ஏனெனில், அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது. அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து அவரை அறிந்திருக்கிறான்"

இந்த மறைமொழியைக் கொண்டேனும் இனி நாம் ஒருவரில் ஒருவர் அன்பு கொள்வோம். அன்புடையவரே ஒருவர் மற்றொரு வரை அறிவர்!

ஓர் ஆணுடினோ, பெண்ணுடனோ நாற்பதாண்டு காலம் பழகிய பின்பும் கூட அவர் குணநலன்களைப் பற்றி, உள்ளக் கிடக்கையைப் பற்றி அறிந்திட நம்மால் இயல்வதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/56&oldid=1219221" இலிருந்து மீள்விக்கப்பட்டது