பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

59


கொண்டுதான் இயேசு தமது கருத்துகளை எடுத்துச் சொல்லி யிருக்கிறார். அதற்குகோர் எடுத்துக்காட்டு.

"ஒருவர் என்னில் அன்பு கூர்வாரேயானால் அவர் என் சொற்களின் படியே நடப்பவர் அவரை என் தந்தை, அன்புடன் விரும்புவார். அப்போது நானும் என் அன்பினை ஏற்றுக்கொண்டு என் சொற்படி நடப்பவர் எவரோ அவர் என்னுடன் தந்தையிடத்தில் ஒன்றுபடுவோம். தந்தையிடத்தில் இடம் பெறுவோம்."

மேலும் அவர் இயம்புகிறார்: "உன்னில் அன்பு மேலோங்கி உன்னை அவ் அன்பு ஆளும் என்றால் உன்னில் நான் வந்து உறைகிறேன்; உன்னுடன் இருந்து வாழ்கிறேன். உன்னுடைய இல்லறம் ஓங்கும். இல்லத்தினை, அன்பு ஒன்றே ஆட்கொண்டு நடத்திச் செல்லும் என்றால் அந்தப் பேருவகையில் நானும் உன்னுடன் பங்கு கொள்வேன்"

இல்லத்தில் கடவுளும் அவர்தம் மைந்தராம் இயேசுவும் வந்து வாழ்ந்தால் அவ் இல்லம் - குடும்பம் எப்படி பாதுகாக்கப்பட்டதாக இயேசுவும் வந்தடையும் சூழலில் சின்னஞ் சிறார்கள் வளர்ந்து வருவார்களேயானால் அவர்களுக்கு அதைவிட வேறு பெறும் பேறு இருக்க முடியாது.

உண்மை அன்பில் இயங்கும் குடும்பம், வாடகை, வரி, வாங்கிய பொருள்களின் விலையின் தொகையைத் தரவேண்டிய குறிப்புப் பட்டியல்கள் ஆகியவற்றை எப்படி ஏற்போம் என்று கலங்க வேண்டிய தேவையில்லை. அன்புறவின் அருளால் அவை தீர்க்கப் பெறும்.

பேதுருவின் படகில் அமர்ந்து கொண்டு, மக்களைப் பார்த்து இயேசு எப்படிப் பேசினார் என்பது நினைவிருக்கும். அப்படிப் பேசிய பின்பு, பேதுருவை நோக்கி 'பேதுருவே, நேற்றிரவு மீன் பிடிக்கச் சென்றனையே! ஏதேனும் கிடைத்ததா?' என்று கேட்டார் இயேசு.

"இரவெல்லாம் விழித்திருந்தும் வலை விரித்தும் ஒன்றும் அகப்படவில்லை" என்று பேதுரு மறுமொழி பகர்ந்தான்.

"ஆழமான இடத்திற்குச் சென்று வலையை விரியுங்கள்' என்று இயேசு அறிவுறுத்தினார்.

இயேசு சொல்கிறபடி நாம் செய்தால் மீன்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஐயப்பாட்டுடன், "தங்கள் சொற்படி செய்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/63&oldid=1219232" இலிருந்து மீள்விக்கப்பட்டது