பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

77


கொள்வதற்கு" என்று மென்மையாகத் தன்மையாக நமக்குச் சொல்லப்படுவது ஏன்?

அன்பினைப் பற்றி இப்படியெல்லாம் சொல்லப்படும் சொற் காத்துப் பேணி வளர்த்துப் வருவோமேயானால் அன்பின் இன்பச் சூழலில் நிலவும் அமைதியினைத் தகர்த்திடும் எந்தச் சொல்லினையும் சொல்லோம்; எப்படிப்பட்ட செயலினையும் செய்யோம்; நாம் அன்புள்ளவராக இருந்தோம் என்றால் நாம் பேசுவதெல்லாம் கனிவாக, அன்பாதரவானதாக உண்மையாகவே இருக்கும். அப்படித்தான் பேசுவோம்.

'நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயன்தலைப்படா அப் பண்பினர்' வாயிதழ்களில் இருந்து வரும் சொற்கள் வேண்டுமானால் திருத்தத்திற்கு உரியனவாக இருக்கலாம். ஆனால் அச் சொற்கள் எல்லாம் அன்பில் ஊறியவை - தோய்ந்தவை!

அன்பு ஓங்கி ஆட்சிச் செய்யும் நெஞ்சத்திலிருந்து வெளிக் கிளம்பி வரும் சொற்கள் எல்லாம் என்றும் எங்கும் வாழ்பவை; நிலைத்து நிற்பவை. அச் சொற்கள், நம்மைச் சுற்றிலும் உள்ள காற்று மண்டலத்தையே கமழச் செய்கின்றன; துறக்கத்தின் தெய்வீக மணம் கமழச் செய்கின்றன என்றால் மிகையல்ல. உண்மை; வெற்றுச் சொல் இல்லை!

கடவுளானவர் கிறித்துவுக்குள் கனிவாகவும் அமைதியாகவும் இருந்ததுபோல் நம்மிலும் ஒருவரில் ஒருவர் அன்பு கொண்டால், நாமும் கனிவும், அமைதியும் வாழும் நெஞ்சத்தைப் பெற்றவர்கள் ஆவோம்.

அன்பில் நாம் வாழ்கிறோம்; வாழ்வோம். அன்பின் வரை றறைக்குள்தான்் நாம் சிந்திக்கிறோம் - சிந்திக்க வேண்டும். அன்பினில் வாழ்ந்து அன்பு வரையறைக்குள் சிந்தித்த உலகை வாழ்த்துவோம்; வாழ்த்தி வாழ்வோம்.

அகமும் புறமும் நம் அன்பில் இணையின்
உகந்தெழும் வையத் துயிர்.

அன்பு மனப்பாங்கு

மாந்தர்களாகிய நமக்கு அன்புப் பின்னணி உண்டு.அன்பின் வழி வந்த பெற்றோரின் மரபு நமக்கு இருக்கிறது. கடவுளால் படைக்கப் பெற்றோம். கடவுள் அன்பாயிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/81&oldid=1515484" இலிருந்து மீள்விக்கப்பட்டது