பக்கம்:அன்பு வெள்ளம்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

93


மானுடத்தின் அன்பால் அளவிடத்தக்க அன்பில்லை இயேசு வின் அன்பு; அது தனித்தன்மை வாய்ந்தது; அது வேறுபட்ட பண்புடையது.

கடவுள் அன்பாக இருக்கிறார். கடவுளாகிய அருளாளரே பிறப்பெடுத்து வந்த மானுடப் பேரன்பு வடிவமே இயேசு. தம்மில் இருக்கும் கடவுள் அன்பினைத்தான் உலக மக்களின் நெஞ்சத்தில் நிலைநாட்டி இயக்கும் ஆற்றல் ஆக விளங்கச் செய்தார் இயேசு.

மனித குலத்தின்பால் இயேசு கொண்ட பழக்கமும் பரிவும், குறுக்கையில் மரித்தும் சித்தரித்துக் காட்டும் அவ் அன்பினை என்னென்பது! அவ் அன்புதான் கிறித்தவ சமயத்துறைப் புத்தெழுச்சி யைத் தனிச்சிறப்புகளால் அவ்வப்போது விரித்துரைப்பதாகும்.

பழைய மானிட அன்பு என்பது தன்னலத்தின் அடிப் படையில் அமைந்தது. அத் தன்னலம், பகைமை, பொறாமை, வெறுப்பு, மட்டும் அன்று கொலை புரிவதில் கூட கொண்டு விடும், கொடியது.

எல்லா வகையான அட்டுழியங்களையும் துன்பங்களையும் புதிய அன்பு ஏற்றுக் கொள்ளும். ஆனால், அத்தனைத் துன்பங்களையும் ஆறாத் துயரங்களையும் கொடுத்தவரின் நிலைக்கு என்றுமே அன்பு தாழாது; விழாது.

பகை, போர், வல்லந்தம், உரிமை மீறல் போன்ற சூழ்நிலையில் உலகம் சுழன்று வரும் போது, இந்தப் புதிய அன்பு, மலைமுகட்டில் சுடரும் ஒளிவிளக்கு போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. மலை மேல் சுடரும் அந்த அன்பு விளக்குத் தன் ஒளிக்கைகளை நீட்டி, இன்றைய நிலையினை விடுத்து, உயர்ந்த சிறந்த நாகரிகத்தை அடைந்திட வருக வருக என்று மானுடத்தை அழைத்தபடி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

அந்த அன்பு, நம்மைச் சுற்றி அழுத்திவிட்டிருக்கும் இழிந்த கீழ்த்தரமான வாழ்க்கையிலிருந்து கை தூக்கிவிட்டு நல்வாழ்வளிக்கிறது. உயர்ந்த வாழ்வளிக்கிறது. பகைமையைப் பூசல்களை, நம்மில் தோற்றுவிக்க நம்மை வற்புறுத்தும் தன்னலத்திற்குள் நாம் சிக்கிடாமல் மேலோங்கி நிற்கச் செய்கிறது புதிய அன்பு; புது வகையான அன்பு!

உலக நாடுகளிடையே போர் நிகழ்வதன் காரணம் என்ன? தன்னலம்தான்! உழைப்பவர் நெஞ்சங்களைச் உரிமையின்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_வெள்ளம்.pdf/97&oldid=1219535" இலிருந்து மீள்விக்கப்பட்டது