பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

நிற்கும் முழவுக் கருவியை இயக்குபவன் போல் தன்னகத்தே தழுவிக் கொண்டு, இனிய துணையான பெண் குரங்கை அழைக்கும் இத்தகைய மலை நாட்டையுடைய நம் தலைவன், உயர்ந்த குடிப்பிறப்பு உடையவன்; தன்னுடன் சேர்ந்தவரைப் பிரியாதவன்; நாவினால் கெடுமொழிகளைக் கூறாதவன்; அன்பு உடையவன்; என்று நீ அவன் சிறப்புகளைச் சொல்லி அவனுடன் என்னைக் கூட்டி வைத்தாய் மிக்க ஒட்டத்தைப் பெற்ற குதிரைகள் பூண்ட பெரிய தேரையுடைய அதியமான் அஞ்சியின் பழம் புகழை நிலை பெறச் செய்த புகழ் உடைய பாணன் நல்ல இசையை வரையறை செய்த இனிய நூலின் எண்ணின் முறைப்படி இயற்றிய பண்ணைக் காட்டிலும் அவன் புதிதாய் இயற்றிய திறத்தைக் காட்டிலும் மணம் செய்துகொண்ட நாளைக் காட்டிலும் எமக்கு இனியனாய் உள்ளான்” என்று தலைவி தலைவனுடன் இல்லறத்தில் சேர்ப்பித்த தோழியிடம் உவந்துரைத்தாள்.

450. மேனிவேறுபாட்டுக்குக்
காரணம் கேட்டால்?

நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின்
காமர் பீலி, ஆய் மயில் தோகை
இன் தீம் குரல் துவன்றி, மென் சீர்
ஆடுதகை எழில் நலம் கடுப்பக் கூடி
கண் நேர் இதழ, தண் நறுங் குவளைக்
குறுந் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை
நீடு நீர் நெடுஞ் சுனை ஆயமொடு ஆடாய்
உயங்கிய மனத்தையாகி, புலம்பு கொண்டு
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி
அன்னை வினவினள்ஆயின், அன்னோ!
என் என உரைக்கோ யானே - துன்னிய
பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி
ஓடை யானை உயர் மிசை எடுத்த
ஆடு கொடி கடுப்ப, தோன்றும்
கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே?

- மதுரை மருதன் இளநாகனார் அக: 358