பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை உரை . த. கோவேந்தன்

107

நம்மை வருத்திய காதலி பகை மன்னரின், பகையைத் தணிப்பதற்குக் காரணமான மதில் போன்று காவல் மிக்கு அடைவதற்கு அரிய அருமை உடையவள் அல்லளோ!” என்று அல்ல குறிப்பட்டுச் சென்ற தலைவன் தன் நெஞ்சிற்குச் சொன்னான்.

454. தலைவர் மலை கண்டு வாழ்கிறேன்

'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பனி
வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள
வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை
நன் பொன் அன்ன நறுந் தாது உதிர
காமர் பீலி ஆய் மயில் தோகை
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக்
கோடு முற்று இளந் தகர்ப்பாடு விறந்து, அயல
ஆடு கள வயிரின் இனிய ஆலி
பகம் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து
இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும்
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும்
உடன்ற அன்னை அமரா நோக்கமும்
வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச்
சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு
குட கடல் சேரும் படர் கூர் மாலையும்
அனைத்தும், அடுஉ நின்று நலிய, உஞற்றி
யாங்கனம் வாழ்தி?' என்றி - தோழி! -
நீங்கா வஞ்சினம் செய்து, நத் துறந்தோர்
உள்ளார்ஆயினும், உளெனே - அவர் நாட்டு
அள் இலைப் பலவின் கனி கவர் கைய
கல்லா மாந்தி கடுவனோடு உகளும்
கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து
பாடு இன் அருவி சூடி
வான் தோய் சிமையம் தோன்றலானே.

- காவட்டனார் அக 378

தோழி! “மிக்க பொருள் உள்ள உயர்ந்த இல்லத்தில் திருமணம் செய்து கொண்ட மகளிர் கூந்தலைப் போல்