பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி



பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஒரா இருந்தனமாக
‘மை ஈர் ஒதி மட நல்லிரே!
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று? என
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட
சொல்லிக் கழிந்த வல் விற் காளை
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, வெறி’ என
அன்னை தந்த முது வாய் வேலன்
‘எம் இறை அணங்கலின் வந்தன்று, இந்நோய்
தணி மருந்து அறிவல் என்னும்ஆயின்
வினவின் எவனோ மற்றே - கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி வழி ஒற்றி
வேட்டம் சொல்லுமோ, நும் இறை? எனவே?
ஊட்டியார் அக 388 -

தோழி, “வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! நம் மலையில் வளர்ந்த மூங்கிலை அறுத்துச் செய்த கொடிய ஒலியுடைய தட்டையைக் கைக்கொண்டு நறிய மணம் உடைய சந்தன மரத்தை முழுவதும் வெட்டி உழுது விளைத்த தினை யின் துய்மை உடைய சிறுகதிர்களைக் கவர்தலால், மூங்கில்கள் நெருங்கிய பெரிய மலைச்சாரலில் கிளிகளை ஒட்டி, பெரிய மலையில் ஒளி பொருந்திய கொத்துகளில் நறுமண மலர்களைக் கொண்ட வேங்கை மரத்தின் கவையில் உயரக் கட்டிய பரணில், பொன் போன்ற பூந்தாதை ஊதும் வண்டின் இனிய இசையைக் கேட்டிருந்தோம் கருமையான நீண்ட கூந்தலை யுடைய மடம் பொருந்திய பெண்டிரே! “விரையும் அம்பு பாய்ந்ததால் புண்பட்டுத் துன்பத்துடன் வந்த உயர்ந்த கொம்பை உடைய ஆண் யானை உங்கள் புனத்தின் வழியில் போனதோ? என்று, சினம் கொண்ட நாய் கறுவித் தன்