பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை . த. கோவேந்தன்

119

பனி மலையில் விளைந்த மூங்கிலை வில்லாக வளைத்துக் கொண்டு கங்கை ஈரத்தையுடைய சடையுடையவன் சிவ பெருமான் அப் பெருமான் உமையம்மையுடன் இமய மலை யில் வீற்றிருந்தான். அப்போழ்து அரக்கர் தலைவனான பத்துத் தலைகளையுடைய இராவணன் அந்த இமய மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகினான்; தன் பெரிய கையால் அதை எடுக்க அவனால் இயலவில்லை வருந்தினான் அந்த இராவணனைப் போன்று புலியினது வடிவை ஒத்த வேங்கை மரத்தைப் புலியானது பகைமை கொண்டு அதன் அடியில் குத்தியது யானை தன் கொம்பைத் திரும்ப எடுக்க மாட்டாது வருந்தும் அது மலையிடம் எல்லாம் எதிரொலிக்கும்படி கூப்பிடும் இத்தகைய இயல்புடைய நாட்டை உடையவனே! யான் சொல்வதைக் கேட்பாயாக!

நீர் இல்லாத நிலத்தின் பயிர்போல் நின் அன்பு இல்லாது பொலிவற்றவள், நீ வருவதற்கரிய இடம் என்று எண்ணாமல் அங்குள்ள பாம்புக்கும் அஞ்சாமல் வர, விடியற்காலத்தில் மழையைப் பெற்ற பயிரைப் போல் அழகு பெறுவாள் அங்ஙனம் இவள் பெற்ற அழகு இவளை விட்டு நீங்காது நிலையாய் நிற்கும்படி காக்கும் ஈடுபாடு உண்டாயின் அதை எங்களுக்குச் சொல்வாய்!

கையில் பொருள் இல்லாதவனின் இளமையைப் போல் நின் அன்பு கிட்டப்பெறாது பொலிவற்றவள், நீ இருளில் இரவு என்று எண்ணாமல் அங்கு செய்தலில் வல்லவனுக்கு உண்டான செல்வத்தைப் போல் அழகைப் பெறுவாள் அங்ஙனம் இவள் பெற்ற அழகானது பிறரால் வந்த அழகு என்று புறம் சொல்வதைப் போக்கும் ஒரு பொருளானது உண்டாயின் அதை எங்களுக்குச் சொல்வாய்!

அறநெறியைப் பொருந்தாது வீணே முதுமையை அடைந்தவன் மறுமைச் செல்வம் அடையாமல் பொலிவுறு வான். அது போல் உன் அருள் பெறாமல் இவள் பொலி வற்றாள், இவள் கொலைத் தொழிற் குறைவில்லாத கானவர் துன்பம் உண்டாகும் என்று எண்ணாமல், மலைச் சாரலில் உண்டான வழியில் வருகின்றாய். வந்த இடத்து, அவ் வருகையால் இவள் பெற்ற புணர்ச்சி இன்பத்தைப் போல்,