பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

தலைவி எம்முடன் கூடி விருப்பம் தரும் நீரில் நீராடினாள். அது போழ்து கால் தளர்ந்து அஞ்சித் தாமரை போன்ற கண்களை நீருள் மறைத்து நீரோடு சென்றனள் இவளிடம் உண்டான அருளால் சுரபுன்னை மலரால் ஆன மாலையைச் சூடிய தலைவன் அவளை அடித்துச் செல்லும் நீரில் குதித்தான் அணிகலன் அணிந்த இவள் மார்பைத் தன் மார்புடன் பொருத்த அணைத்துக் கொண்டான் கரையில் அவளைக் காத்துக் கொணர்ந்தான் அவனது அகன்ற மார்பை இவளது எழுகின்ற முலைகள் சேர்ந்தன என்று பிறர் கூறும் கூற்றால் என் தோழியான இவள், மழையைப் பெய்யச் செய்ய நாம் விரும்பினால் அதை நமக்குத் தரும் கற்பின் பெருமையுடையவள். ஆனாள்.

இவளே அல்லாமல் அவனும் தினைப்புனத்தில் இடப் பட்ட பரணில் எரிந்த அகிலின் புகையால் உண்ணப்பட்டு ஒளி குன்றித் திரியும் நிலவும் வானில் போக, அம் மலை உச்சியில் தங்கும் மலையிலே வைக்கப்பட்ட தேன்கூடு என்று எண்ணி அதை அழித்தற்குக் கண்ஏணி அமைத்திருக்கும் காடு அகன்ற நாட்டினன் மகன் அவன்.

சிறு குடியிலுள்ளவரே! சிறுகுடியிலுள்ளவரே! இம் மலையில் வாழ்பவர் இவ்வாறு உதவி செய்தவர்க்குக் கொடுக்க எண்ணாமல் அயலார்க்குக் கொடுக்க எண்ணி அறம் அல்லாதவற்றை விரும்பி நடக்கின்றனர். அதனால் இனி இங்கு வள்ளிக் கொடியும் கிழங்கை ஈனாது மலையின் மீது தேன் கூடுகள் கட்டப்படமாட்டா; கொல்லையில் தினைகளும் கதிர்களை ஈனா.

காந்தள் பூ மணம் கமழ்கின்ற, பார்த்தவர் கண்ணைத் தன்னிடத்தை வாங்கிக் கொள்ளும் கரியமலை. அதனிடை வளர்ந்த மூங்கிலைப் போன்ற மென்மையான தோளையுடைய குறவரின் மடப்பத்தையுடைய மங்கையர் பிழையாமல் தம் கணவரைத் தெய்வம் என்று வணங்கி எழுந்தி ருத்தலால் அவர்களின் தந்தை முதலியவரும் தாங்கள் எய்யும் அம்புகள் இலக்குத் தப்பாதவர் ஆனார்

உறவினர் மணம் செய்துதர மறுத்தபோது அறத்தொடு நின்ற என் கூற்றைச் செவிலித்தாய் நெஞ்சினால் உணர்ந்து