பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

123

நற்றாய்க்கு அறத்தொடு நின்றாள். அவள் அதைக் கேட்டு என் தமையன்மார்க்குச் சினம் உண்டாகாமல் கூறினாள்

அதைக் கேட்ட தமையன்மாரும் ஒரு முழுத்த நேரம் மனம் கொதித்தனர்; ஆராய்ந்தெடுத்த அம்புகளைப் பார்த்தனர்; வில்லையும் பார்த்தனர்; எழுந்து கலங்கினர் பின் இருவரிடத்தும் குற்றம் இல்லை என்று சினம் தணிந்தனர்; நாணத்தால் தலை சாய்ந்திருந்தனர்

ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகளை அணிந்த தலைவியே! நீயும் நின் கணவனும் கூடும்படியாய் இந்த மலை வாழ் முருகப் பெருமான் உள்ளம் மகிழும்படியாம் மகிழ்ந்து குரவைக் கூத்தைக் கையைக் கோத்து ஆடுவதற்கு அக்கூத்தில் பாடும் பாட்டைக் கேட்டு நிலைப் பாடலைப் பாடுவாய்.

அதைக் கேட்டாள் தலைவி! ‘நற்றாய்! நம்மைத் தலைவர் மணந்து கொள்ளும் நாள் நம்மிடம் வரும் அளவில் நம் சுற்றத்தார் மலையில் நாணத்தைத் தாங்குபவர் என்ன நல் வினையைச் செய்தாரோ! என்று சொன்னாள்

புனத்தில் வளர்ந்துள்ள வேங்கைப் பூவின் பொன் போன்ற தாது உதிரும் பாறையையுடைய முற்றத்தில் வெளி யில் ஏற்படும் கூட்டமும் ஒட்பில் நடக்கும் அன்றோ! அந்த நனவில் புணர்ச்சி நடந்ததாக அப்போது கனவில் உண்டாகும் கூட்டத்தைப் போக்கி விடுவோம் அல்லமோ! எனத் தலைவி உரைத்தாள்

அதைக் கேட்ட தோழி, வாளைத் தீண்டும் நாடனும் நீயும் அம் மணத்தில் முன்பு அறிந்து கொள்ளாதவர் போல் நடந்து கொள்வீரோ! நீவிர் முன்பு அறிமுகமாகாதவர் போல நடப்பின் யான் பழைய உறவைக் கண்டறியாதேன்போல் நும் பழைய தொடர்பை மறைப்பேனோ!’ எனக் கூறினாள்.

முகில் தவழும் மலையை உடையவனின் மணக் கோலம் காணாமல் கையால் புதைத்தலைப் பெறுகின்ற கண்களும் கண்கள் எனச் சொல்லப்படுமோ!

அதைக் கேட்டதலைவி நான் உன் கண்ணால் காண்பேன் என்றாள். அதைக் கேட்ட தோழி “நெய்தல் மலர் போல் மை பூசப் பெற்ற கண்ணான உன்கண் என் கண்ணாவதாகுக!” என்றாள்