பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

அன்பொடு புணர்ந்த ஐந்திணை - குறிஞ்சி

கொள்ளுமாறு நீ கெடுத்தாய். இவ்வாறு செய்ததன் காரணம் யாது? காற்று வீசவும் தன் பெருமையால் அசையாதபடி நின்று ஒலிக்கும் அருவிகளையுடைய நின் பெரிய மலையில் உள்ள சுனையில் மலர்ந்த மலரினைப் போன்றது என்ற பொறாமையோ, உனக்கு அருள் இல்லாததோ?

உயிர் நீக்கும் பருவம் என்று கூறுமாறு கலங்குதற்குக் காரணமான காம நோயைக் கடக்கும்படி என் தோழியின் பெரிய திரண்ட தோள்கைள அழகு குலைந்திட நீ கெடுத்தாய் இதன் காரணம் யாது? புகரையுடைய முகம் பொருந்திய யானையுடன் புலி போரிட்டுத் துகைத்துத் திரியும் உன் அகன்ற மலையில் உள்ள மூங்கில் போல் விளங்குவன என்னும் பொறாமையோ? இல்லாத காரணமோ?

நள்ளிரவிலும் உறக்கம் கொள்ளாமல் உள்ளம் தடு மாறும் என் தோழியின் நல்ல எழுச்சி அழகு கெடும்படி நீ கெடுத்தாய். இதன் காரணம் யாது? ஞாயிற்றைத் தீண்டும்படி மிகயுயர்ந்த வண்டுகள் ஒலிக்கின்ற முழைஞ்சுகளை உடைய பக்க மலையிடத்துள்ள தீயைப் போன்ற வேங்கையின் மலர்க் கொத்தை ஒக்கும் என்ற பொறாமையோ, அருள் இல்லாததோ?

என்று தலைவரின் தீமைகள் பலவற்றையும கூறி இடித் துரைத்தலால், அவர் என் கூற்றை உண்மை எனத் தெளிந்தார் களவொழுக்கத்தில் நம்முடன் நெருங்குபவர் பின் வரைவு முயற்சியுடன் நெருங்கினார். பிறைநிலவினைப் போன்ற நெற்றியையுடையவளே! இக் களவொழுக்கத்தில்வேட்கை நீங்கி அவரைப் பேணி அவரிடத்தில் தங்குதலை அவர் விரும்பினார் விரும்பிய அந் நாளிலேயே நம் உறவினரும் அவர்க்கே தலைவியை மணம் செய்து தருவதாக முடிவு செய்தனர். இதுவே நமக்கு உண்டான நன்மை எனத் தோழி யுரைத்தாள்

468. ஆற்றாமை கூறி மணம் வேண்டல்

வீயகம் புலம்ப், வேட்டம் போகிய
மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி,
வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின்,