பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

145


பசலையானது மாமை நிறத்தில் அது செய்த பழியுண்டோ? இல்லையே?

அவள் அப்படியாயினாள். ஆதலின் அவள் பூப் போன்ற கண் மூடாமையை நீங்கி உறங்குதலையும் அஞ்சுகின்றேன் அந்த உறக்கத்தில் எண்ணி வருந்தத்தக்க கனவால் பின்பு ஏற்படும் வருத்தம் அவ் அரிய வருத்தத்தால் உண்டான கேட்டை ஆராய்ந்து பார்த்தால் அஃது எல்லை காண முடியாத மலையை விடவும் பெரிது இனி மேல் இத்தகைய வருத்தம் அவள் அடையாத வண்ணம் நீ விரும்பியவளுடன் கொண்ட உறவு பின்னுதலை நீ அளிக்க வேண்டும் மணந்து கொள்ள வேண்டும் என்றாள் தோழி.

471. இரவில் வராதே பகலில் வா

கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,
நனவில் தான் செய்தத மனத்தது ஆகலின்,
கனவில் கண்டு, கதுவென வெரீஇ
புதுவதாக மலர்ந்த வேங்கையை
அது என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,
பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்
காணும் பொழுதின் நோக்கல் செல்லாது
நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட,

போது எழில் மலர் உண்கண் இவள்மாட்டு நீ இன்ன
காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே,
மின் ஒரும் கண் ஆக, இடி என்னாய், பெயல் என்னாய்,
இன்னது ஒர் ஆர் இடை, ஈங்கு நீ வருவதை.

இன்புற அளித்தனை இவள்மாட்டு நீ இன்ன
அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே
மணம் கமழ் மார்பினை, மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து,
அணங்குடை ஆர் இடை, ஈங்கு நீ வருவதை.
இருள் உறழ் இருங் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன
அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே,
ஒளிறு வேல் வலன் ஏந்தி, ஒருவன் யான் என்னாது,
களிறு இயங்கு ஆர் இடை, ஈங்கு நீ வருவதை.